- Home
- Business
- 3 நாட்களாக சரசரவென குறையும் தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குஷி
3 நாட்களாக சரசரவென குறையும் தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குஷி
இந்தியாவில் தங்கம் மீதான ஆர்வம் அதிகம். சமீபத்தில் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், கடந்த 3 நாட்களில் சவரனுக்கு 2200 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Today : தங்கம் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்தாலும் தங்க நகைக்கடைகளில் மட்டும் கூட்டம் குறையவே இல்லை. குறிப்பாக திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் மக்கள் அதிகளவு தங்கத்தை அணிய விரும்புவார்கள். எனவே மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகளவு தங்கம் உள்ளது.
gold rate
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
இந்த நிலையில் தங்க நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது நாள் தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 10ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்து வருகிறது.
gold rate
தொடர்ந்து சரியும் தங்கம் விலை
கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்தது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது. சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனையானது. இந்த நிலையில் 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது
gold rate
இன்றும் குறைந்த தங்கம் விலை
தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 8ஆயிரத்து 285 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 66ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை கொண்டாட வைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 2200 ரூபாய் குறைந்துள்ளது.