Today Gold Rate: இதை விட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! முந்துங்கள்!
Today Gold Rate: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.120 குறைந்துள்ளது.
தங்கம் ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிரடியாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இதனால், வரும் நாட்களில் தங்கம் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது தங்கம் விலை 1000 ரூபாய் உயர்ந்தால் 100 ரூபாய் அளவுக்கே குறைந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் விலை ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் அக்டோபர் மாதத்திலும் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் நகைப்பிரியர்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு நகைக்கடைகளில் எந்நேரமும் நகைக்கடைகளில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க: School Teacher : ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: Government Employee: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! போனஸ், டிஏ.வில் ஏதாவது டவுட்டா! உடனே இதை செக் பண்ணுங்க
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385-க்கு விற்பனையானது.
இன்றைய (நவம்பர் 2) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,370-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,875-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.63,000-ஆக விற்பனையாகிறது.
இதையும் படிங்க: Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! எத்தனை கோடிக்கு மது விற்பனை? எந்த மாவட்டம் முதலிடம்!
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.106,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.