MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 2வது நாளாக சரசரவென குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 2வது நாளாக சரசரவென குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 05 2025, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold Rate

Gold Rate

தங்கத்தில் அதிக முதலீடு

தங்கம் என்ற வார்த்தையை கேட்டாலே பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் தங்கத்தின் மீதான ஆர்வம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகவே உள்ளது.  திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்க நகைகளை அணிய இந்திய பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள். அதுவும் குறிப்பாக தமிழக பெண்கள். ஏதாவது ஒரு விஷசே நிழ்ச்சிக்கு சென்றால் மற்றவர்கள் கழுத்தில் எந்த மாதிரியான நகைகளை அணிந்துள்ளனர் என்பதை பார்க்கும் பழக்கம் தமிழக பெண்களிடம் உண்டு. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Tamilnadu Gold Rate

Tamilnadu Gold Rate

கிடுகிடுவென உயர்ந்த தங்கம்

மேலும் அவசர பண தேவைகளுக்கு தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தான் தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தங்கம் ரூ.10,000 முதல் 15,000 வரை உயர்ந்துள்ளது.  இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

35
yesterday Gold Rate

yesterday Gold Rate

கடந்த இரண்டு நாட்களாக குறைந்த தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கு விற்பனையானது. 

இதையும் படிங்க: தங்கம் விலையை ஏற்றிவிட்ட டிரம்ப்! தங்க ETF களில் குவியும் முதலீடு!

45
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய தங்கம் விலை

இன்றைய (ஏப்ரல் 05) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனையாகிறது.  

55
24 carat gold

24 carat gold

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,065-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.72,520-ஆக விற்பனையாகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved