ஷாக் கொடுத்த தங்கம்.! மீண்டும் உயர்ந்த விலை.! இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா.?
தங்கத்தின் விலை சமீப நாட்களில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் விலை குறைந்திருந்தாலும், மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
gold
தங்கத்தின் விலை என்ன.?
தங்கத்தை வாங்க நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் தங்கம் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் தான் தங்களது எதிர்கால சேமிப்பாக மக்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கிறார்கள்.
தங்கத்தின் விலையானது டிமாண்ட் மற்றும் தேவையைப் பொறுத்தும், நாட்டின் பொருளாதார நிலைகளைப் பொறுத்தும் அவ்வப்போது மாறுபடும். அந்த வகையில் கடந்த இரண்டு 3 மாதங்களாக உயர்ந்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது சரசரவென குறைந்து வருகிறது.
gold ring
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
கடந்த மாதம் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத வகையில் உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 60ஆயிரத்தை எட்டிய நிலையில் அடுத்தடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியது. சுமார் 15 நாட்களில் ஒரு சவரனுக்கு 4300 ரூபாய் வரை குறைந்ததுள்ளது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. தங்கத்தின் விலை குறைந்திருக்கும் போதே வாங்கி வைத்தால் நல்லது என்ற காரணத்தால் பழைய நகைகளை அடகு வைத்து தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். ஏனெனில் தற்போது குறைந்து வரும் தங்கத்தின் விலையானது எந்த நேரமும் மீண்டும் உச்சத்தை அடையும் என கூறப்படுகிறது.
Gold price today
திடீரென குறைந்த தங்கம் விலை
அந்த வகையில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் என்ற இமாலய இலக்கை எட்டும் என கூறப்படுகிறது. எனவே அப்போது தங்கம் வைத்திருப்பவர்கள் தான் கோடீஸ்வரர்களாக கருதப்படுவார்கள். எனவே தற்போது தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் படி, இன்னும் 3 மாதங்கள் தங்கம் விலை இப்படி தான் குறைந்து இருக்கும். ஆனால் எந்த நேரமும் விலை மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதால், இன்னும் குறையுமா என காத்திருக்க வேண்டாம் என அலர்ட் செய்துள்ளனர்.
gold Jewels
அமெரிக்க தேர்தல் முடிவு
தங்கத்தின் விலை திடீரென குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க தேர்தல் முடிவு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பங்குகள் பக்கம் திரும்பியதும் காரணம் என தெரிவிக்கின்றனர். மேலும் .ரூபாய் மதிப்பும் டாலருக்கு நிகராக தொடர் சரிவடைவதை அடுத்து தங்கம் விலைகள் சரிவு கண்டு வருவதாக கூறப்படுகிறது.
jewellery
இன்றைய தங்கம் விலை என்ன.?
இந்தநிலையில் தங்கத்தை வாங்கிக் குவிப்பதில் உள்ள ஆர்வம் மக்கள் மத்தியில் குறையவே இல்லையென்று சொல்லலாம். ரூபாய் நோட்டுகளுக்குப் பிறகு மதிப்புமிக்க பொருள் ஒன்று உள்ளது என்றால் அது தங்கம்தான். அந்த வகையில் தங்கத்தின் விலையானது கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் 6,935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் ஒரு சவரன் 55,480 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென அதிகரித்துளது. கிராம் ஒன்றுக்கு 60 ரூபாயை உயர்ந்துள்ளது. அதன் படி ஒருகிராம் 6,995 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கத்திற்கு 480 ரூபாய் உயர்ந்து 55,960 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.