MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பிரேக்கே இல்லாமல் உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

பிரேக்கே இல்லாமல் உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

சர்வதேச சந்தை மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், விரைவில் 80 ஆயிரத்தை எட்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Feb 20 2025, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிரேக்கே இல்லாமல் உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

பிரேக்கே இல்லாமல் உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

தங்கம் விலையானது சர்வதேச மார்க்கெட் விலை நிலவரப்படி தினமும் ஏறி இறங்கி வருகிறது. இந்த நிலையில்  இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது. இதனால் தங்கம் விலையானது வரலாறு காணாத புதிய, புதிய உச்சத்தை தினந்தோறும் சந்திக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

24
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் இறுதியில் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுமார் 40 நாட்களில் ஒரு சவரன் 64ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த விலை உயர்வானது தற்போது டிரெய்லர் தான் எனவும் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு சவரன் 80 ஆயிரத்தை கடந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் ரூபாயை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

34
நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி

நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி

இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டு பட்ஜெட் ஒதுக்கியவர்கள் பலரும் தங்கத்தின் மீதான உந்த  விலை உயர்வு காரணமாக தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்து கூடுதல் நிதி ஒதுக்க  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபரின் அதிரடி முடிவால் வர்த்தக போர் உருவாகி வருகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டை பல்வேறு நாடுகள் அதிகரித்துள்ளன. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 

44
64ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

64ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

இந்த நிலையில் தான் இந்த வாரம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 8ஆயிரத்து 35 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 64,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 8,070 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 64560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved