MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate: தங்கம் விலை சரிவு! முகூர்த்த நாட்களில் சந்தோஷம்!

Gold Rate: தங்கம் விலை சரிவு! முகூர்த்த நாட்களில் சந்தோஷம்!

சர்வதேச பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. முகூர்த்த நாட்கள் தொடங்கும் நிலையில் இந்த விலை சரிவு மக்களை மகிழ்வித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 23 2025, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தங்கம் விலை சரிவு பொதுமக்கள் மகிழ்ச்சி
Image Credit : AI GENERATED IMAGE WITH GEMINI

தங்கம் விலை சரிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

சர்வதேச பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலையில் சரிவு காணப்படுகிறது. முகூர்த்த நாட்கள் தொடங்கவுள்ள நிலையில் இந்த விலை சரிவு அடித்தட்டு மக்களை சந்தோஷ படுத்தியுள்ளது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

26
இதுதான் இன்றைய விலை
Image Credit : AI Generated

இதுதான் இன்றைய விலை

சமீப காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.ஜூன் 13 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு அடுத்த நாளும் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்ததால் நடத்தர மக்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் ஆபரணத்தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி ஆபரணத்தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி 1 கிராம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Related image1
Amazon: ரூ.2,000 கோடி முதலீடு!படிக்காதவர்களுக்கும் வேலை! கிராம பகுதிகளில் ஆலை!
Related image2
ஆயுதமாக மாறும் தங்கம்.! வாங்கி குவிக்கும் வங்கிகள்.! De-dollarization காரணமா?
36
விலை சரிவுக்கு போர் பதற்றம் காரணமா?
Image Credit : ChatGPT

விலை சரிவுக்கு போர் பதற்றம் காரணமா?

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதானால் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைந்துள்ளது. இது, நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

46
பிசியாக காணப்பட்ட நகைக்கடைகள்
Image Credit : AI

பிசியாக காணப்பட்ட நகைக்கடைகள்

இந்தியாவில் மூகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சென்னை மதுரை கோவை நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகள் காலை நேரத்திலேயே பிசியாக காணப்பட்டது. சில நகை கடைகளில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

56
தங்கம் என்ற சென்டிமென்ட் உலோகம்
Image Credit : AI

தங்கம் என்ற சென்டிமென்ட் உலோகம்

இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், தங்கத்தின் விலை சரிவை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர். முதலீட்டுக்காக அல்லாமல் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு நகைகளை வாங்குவோர் இந்த விலை குறைப்பை சரியாக பயன்படுத்தி லாபம் பார்க்க வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலாணி தெரிவித்துள்ளார்.

66
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
Image Credit : AI

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி ஆபரணத்தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி 1 கிராம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
Amazon: ரூ.2,000 கோடி முதலீடு!படிக்காதவர்களுக்கும் வேலை! கிராம பகுதிகளில் ஆலை!
Recommended image2
ஆயுதமாக மாறும் தங்கம்.! வாங்கி குவிக்கும் வங்கிகள்.! De-dollarization காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved