MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்க நகை பராமரிப்பு: பொலிவு மாறாமல் இருக்க டிப்ஸ்!

தங்க நகை பராமரிப்பு: பொலிவு மாறாமல் இருக்க டிப்ஸ்!

தங்க நகைகளின் பொலிவை எப்போதும் போல பராமரிக்க சில எளிய வழிமுறைகள். தினசரி உபயோகிக்கும் நகைகள், மோதிரம், மூக்குத்தி போன்றவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதை அறியலாம்.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 05 2025, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொலிவு மாறவே மாறாது
Image Credit : Pinterest

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொலிவு மாறவே மாறாது

தங்க நகைகளை அணிந்து செல்லும் பெண்களின் அழகு கூடுவதுடன், அவர்களின் தன்நம்பிக்கையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. திருமணமான ஆண்கள் தனது துணையை ஜவுளிக்கடைக்கு கூட்டி செல்வதை விட, நகைக்கடைக்கு கூட்டி சென்றால் இல்லர வாழ்வில் சண்டை சச்சரவுகள் இருக்கவே இருக்காது. தங்க நகைகளை வாங்குவோர் அதனை பத்திரமாக கையாண்டால் அதன் பொலிவு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறவே மாறாது. அதேபோல் தினசரி உபயோகிக்கும் ஆபரணங்கள் டமேஜ் ஆவது தடுக்கப்படும்.

28
நம்முடன் வேளை செய்யும் வளையல்கள்
Image Credit : Getty

நம்முடன் வேளை செய்யும் வளையல்கள்

தங்கத்தில் செய்யப்படும் செயின், தோடு, மூக்குத்தி போன்றவற்றை எதனாலும் டிஸ்டர்ப் ஆகாது என்பதால் அதனை தினமும் உபயோகப்படுத்தும் போது டேமேஜ் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனலாம். ஆனால், கைகளில் அணியும் வளையல் மோதிரம் போன்றவை அடிக்கடி டேமேஜ் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல் பாத்திரம் தேய்க்கும்போது வளையல்கள் அந்த உராய்வில் தேய்ந்து போகவும், டேமேஜ் ஆகவும் செய்யும்.

Related Articles

Related image1
குழந்தைகள் பெயரில் முதலீடு - எப்போது? எப்படி செய்யலாம்?
Related image2
PPF vs SIP: எது சிறந்த முதலீடு?
38
வளையல்கள் தேர்வு - இப்படி செய்யலாம்
Image Credit : freepik/Getty

வளையல்கள் தேர்வு - இப்படி செய்யலாம்

தினசரி உபயோகத்திற்காக வளையல்களை வாங்குகிறீர்கள் என்றால் பணத்தைக் கொஞ்சம் அதிகமாக பணத்தை முதலீடு செய்து சற்று கனமான வளையல்களை வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.அது சிம்பிளான டிசைன் கொண்டதாக இருந்தால் நல்லது. எடை குறைவான, வேலைப்பாடுகள் நிறைந்த வளையல்களை வாங்கி அவற்றை கையோடு அணிந்திருந்தால், கிச்சன் வேலைகள், அலுவல் கீபோர்டு வேலைகள் என்று அதனை நீங்கள் `ரஃப் யூஸ்' (Rough use) செய்யும்போது சட்டென உடைந்து விடும். எனவே, இப்படிப்பட்ட வளையல்களை வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்திவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் கழற்றி வைத்துவிடுவது நல்லது. டிசைன் அதிகமுள்ள வளையல்கள் சருமத்தில் கீரல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

48
இது நல்ல ஐடியாவா இருக்கே!
Image Credit : Getty

இது நல்ல ஐடியாவா இருக்கே!

டிசைன் அதிகமான வளையல்களை அணியும் நபர்கள் குழந்தைகளை கொஞ்சும் போது கவனமுடன் இருப்பது அவசியம். அதிக விலை காரணமாக சிலரால் அதிக கிராம்களில் தங்க வளையல்களை வாங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஒரு சவரன், ஒன்றே கால் சவரனிலேயே வளையல்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், எடை குறைவான இந்த வளையல்கள் சட்டென வளைந்துவிடும் என்பதால், அந்தத் தங்க வளையல்களின் உள்ளே பிளாஸ்டிக் வளையல்களை, வெளியே தெரியாதவாறு நகைக்கடைகளிலேயே பொருத்திக் கொடுப்பார்கள். இதனால் தங்க வளையலானது திடமாக இருக்கும்.டேமேஜ் கண்டிப்பாக தவிர்க்கப்படும்.

58
அழகான மோதிரம் - அவசியமான டிப்ஸ்
Image Credit : our own

அழகான மோதிரம் - அவசியமான டிப்ஸ்

நிறைய வேலைப்பாடுகளுடன் காணப்படும் மற்றும் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தை தினசரி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வேளாண் பணிகள், பாத்திரம் தேய்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது, லேப், பில்லிங், கீபோர்டு உள்ளிட்ட‌ அலுவல் சம்பந்தமான வேலைகள் என்றிருக்கும்போது, வேளைப்பாடு மிகுந்த மோதிரங்கள் தேய்ந்து போவதற்கோ, உடைந்து டேமேஜ் ஆவதற்கோ வாய்ப்புகள் அதிகம். எனவே, பிளெயின் டிசைன் மோதிரங்களை தினசரிப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்வது கட்டாயம்.

68
 மூக்குத்தி பூ மேல... காதோரம் லோலாக்கு...
Image Credit : our own

மூக்குத்தி பூ மேல... காதோரம் லோலாக்கு...

மூக்குத்தியைப் பொறுத்தவரையில் கல் வைத்த மூக்குத்தியே பெரும்பாலனோரின் விருப்ப தேர்வாக உள்ளது. அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும் நிலையில், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில் மட்டும் கழற்றி வைத்துவிடுவது நல்லது. இதன்மூலம் மூக்குத்திக் கல்லில் எண்ணெய் இறங்குவதைத் தடுக்க முடியும். மூக்குத்தி பொலிவு குறையாமல் புதிதாக வாங்கியதை போலவே பளபளப்புடன் இருக்கும். கற்கள் பதித்த கம்மல் உள்ளிட்ட எல்லா நகைகளுக்கும் இது பொருந்தும்.

78
கருமையை பளபளப்பாகும் வழி! இவ்ளோ ஈசியா?
Image Credit : freepik

கருமையை பளபளப்பாகும் வழி! இவ்ளோ ஈசியா?

தங்கச் செயின் பளபளப்பு குறைந்து கருமையாக தோன்றினால், ஷாம்பூ கலந்த நீரில் ஊரவைத்து பிரஷ் மூலம் சுத்தம் செய்யுங்கள். அழுக்குகள், எண்ணெய் போன்றவை நீங்கிவிடும். ஷாம்பூவில் வேதிப்பொருள்கள் இருக்கும் என்பதால், நகையைத் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டியது அவசியம்.செயினைப் போலவே, தினசரி வளையலையும் இதுபோலச் சுத்தம் செய்யலாம். கல் வளையல்களைப் பொறுத்தவரையில் நார்மல் தண்ணீரில் ஜென்டிலாக கழுவி மென்மையான துணியால் ஈரம் போகத் துடைத்துப் பயன்படுத்தலாம்.

88
எங்கே வைக்க வேண்டும் நகைகளை?
Image Credit : our own

எங்கே வைக்க வேண்டும் நகைகளை?

தங்க ஆபரணங்களை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டயது அவசியம். பொதுவாகப் பலரும், தங்க நகைகளை வீட்டிலிருக்கும் ஸ்டீல் பீரோவில் வைப்பது வழக்கம். ஆனால், மர பீரோவில் வைப்பதே பரிந்துரைக்கு ஏற்றது. மர பீரோ இல்லை என்றால், நகைகளை ஒரு மரப்பெட்டியில் வைத்து, பின்னர் அந்த மரப் பெட்டியை ஸ்டீல் பீரோவில் வைக்கலாம். இப்படிச் செய்யும்போது நகைகள் பொலிவு குறையாமல், ஒரிஜினல் நிறம் மாறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஆயிரக்கணக்கில் நகை வாங்குவோர் சில நூறுகளில் கிடைக்கும் நகைப்பெட்டியை வாங்கி அதில் நகைகளை வைக்கலாம் தானே!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
முதலீடு
வணிகம்
வணிக யோசனை
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க இறக்குமதி விதிகள்
தங்க நகை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved