MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரு சவரன் தங்க நகை 2 லட்சம்.! ஒரு கிராம் 25ஆயிரமாக உயரும் - வெளியான ஷாக் தகவல்

ஒரு சவரன் தங்க நகை 2 லட்சம்.! ஒரு கிராம் 25ஆயிரமாக உயரும் - வெளியான ஷாக் தகவல்

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக லாபம் ஈட்டி வருவதால், தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 30 2024, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கிடு கிடுவென உயரும் தங்கம்

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க நகை 8.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க நகை 54 ரூபாய்க்கும், 1980 ஆம் ஆண்டு 100 ரூபாயை கடந்த தங்கத்தின் விலையானது, 1990 ஆம் ஆண்டு 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2000 ஆண்டு 440க்கும், 2007 ஆம் ஆண்டு 1800 ரூபாய்க்கும், 2012 ஆம் ஆண்டு 3000 ரூபாய்க்கும், 2024 ஆம் ஆண்டு 7500 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதே போன்ற தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தங்கத்தில் முதலீடு

தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்ய பொதுமக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள், குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளின் அத்தியாசிய தேவைகளுக்கும், படிப்பிற்கும், திருமணத்திற்கும் உதவியாக இருக்கும் என நினைப்பார்கள். நிலத்தில் முதலீடு செய்தால் உடனடியாக விற்பனை செய்ய முடியாத நிலையின் காரணமாக அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு எப்போதும் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை. அந்த அளவிற்கு லாபம் கொடுத்து வருகிறது. எனவே தங்கத்தின் மீதான தேவை அதிகரித்திருப்பதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கம் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
 

35
Gold price chennai

Gold price chennai

தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை

இந்தநிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், விலை அதிகரிக்க காரணம் என்ன என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.  தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகமாக உள்ளது.  தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும்  41 சதவிகிதம் லாபம் அடைந்துள்ளனர். இதுவரை தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது இல்லை, லாபம் மட்டுமே கிடைக்கும். 50 வருடத்தில் முதலீடு லாபமாக உள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இல்லை. தீபாவளி பண்டிகை நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

45
Gold price today

Gold price today

ஒரு சவரன் 2 லட்சத்தை தொடும்

மேலும் உச்சத்தை நோக்கி தான் தங்கம் விலை செல்லும், அடுத்த 10 வருடத்தில் நினைத்து பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். 2030ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாயை தாண்டி விடும். அடுத்த 10 வருடத்தில் ஒரு கிராம் 25ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு சவரன் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். 

55

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

மேலும் தங்கம் விலை உயர்விற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக  ஜியோ அரசியல், அமெரிக்கா தேர்தல், மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர காரணம் என தெரிவித்துள்ளார். மேலும்  அமெரிக்க மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணம் என கூறினார்.

மேலும் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவும் தங்கம் விலை கடுமையாக உயர காரணம் என தெரிவித்தார், இதே போல வெள்ளியின் விலையும் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அதிகரிக்கும் என ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார். 
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தங்கம்
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved