மாதம் ரூ.50,000 பென்ஷன் கொடுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம்! முதலீடு செய்வது எப்படி?
என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) ஓய்வூதிய திட்டமிடலுக்கான ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். இத்திட்டத்தில் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் ரூ.50,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
Pension planning
ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் வாழ்க்கை பெரும்பாலும் வேலையின் போது இருப்பது போல் இருக்காது. உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது, ஆனால் உடலால் கடினமாக உழைக்கும் திறன் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில் உறுதுணையாக இருக்க, சரியான நேரத்தில் உங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைச் உருவாக்குவது மிகவும் முக்கியம்.
உங்களுக்கான பென்ஷன் பிளான் இன்னும் இல்லை என்றால், அதிகம் யோசிக்காமல் இப்போதே தொடங்குங்கள். முதுமையில் நல்ல வருமானத்தைப் பெற இப்போதே முதலீடு செய்யுங்கள்.
National Pension System
NPS என்ற தேசிய ஓய்வூதிய அமைப்பு இந்த விஷயத்தில் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. இது சந்தையுடன் இணைக்கப்பட்ட அரசாங்கத் திட்டமாகும். அதாவது இதில் இருந்து கிடைக்கும் வருமானம் சந்தையை அடிப்படையாகக் கொண்டது.
ஓய்வூதியத் திட்டத்தில் இந்தத் திட்டம் மிகவும் பிரபலமானது. இத்திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் கிடைக்கும் பெரிய தொகையுடன் சேர்த்து ஓய்வூதியத்துக்கான ஏற்பாடு செய்யப்படுகிறது.
What is NPS?
18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் NPS முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தாலும், அந்தத் தொகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஓய்வுக்குப் பிறகு, மொத்தத் தொகையில் 60% ஐ எடுத்துக் கொள்ளலாம். மேலும் 40 சதவிகிதம் ஆண்டுத் தொகையாகப் பெறலாம். இதுதான் ஓய்வூதியமாகக் கிடைக்கும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
NPS investment tips
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், 50,000 ரூபாய் மாதாந்திர பென்ஷன் பெற ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
40 வயதில் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டைக் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர வேண்டும். அதாவது மொத்தம் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.
NPS investment guide
இவ்வாறு முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.45,00,000 ஆக இருக்கும். இதற்கு 10% வட்டி கிடைத்தால், வட்டியில் இருந்து ரூ.1,55,68,356 கிடைக்கும். இதன்படி, 45,00,000 + 1,55,68,356 = 2,00,68,356 ரூபாய் சேர்ந்துவிடும்.
25 ஆண்டுக்குப் பிறகு சேர்ந்திருக்கும் இந்தத் தொகையில் 60%, அதாவது ரூ.1,20,41,013 மொத்தமாக எடுத்துகொள்ளலாம். மீது உள்ள 40% தொகை, ரூ.80,27,342 தொடரந்து முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டில் 8% வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.53,516 கிடைக்கும்.