இந்த கார்டுக்கு 250 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. முழு விவரம் உள்ளே
IndianOil RBL Bank XTRA கிரெடிட் கார்டு மூலம் ஆண்டுக்கு 250 லிட்டர் வரை இலவச பெட்ரோல் பெறலாம் என வங்கி கூறுகிறது. அடிக்கடி பெட்ரோல் நிரப்பும் வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

இலவச பெட்ரோல் கார்டு
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், சில கிரெடிட் கார்டுகள் வாகன ஓட்டிகளுக்கு பெரிய நிவாரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் IndianOil RBL Bank XTRA Credit Card. இந்த கார்டு மூலம் ஆண்டுக்கு 250 லிட்டர் வரை பெட்ரோலை இலவசமாக பெறலாம் என வங்கி தெரிவித்துள்ளது. இது இந்தியாயில் மற்றும் RBL வங்கி இணைந்து வழங்கும் கூட்டு பிராண்ட் கார்டு ஆகும். அடிக்கடி பயணம் செய்பவர்கள் மற்றும் காரோ, பைக்கோ மூலம் அதிக செலவிடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
கிரெடிட் கார்டு சலுகைகள்
இந்த கார்டின் முக்கிய சிறப்பு இந்தியாயில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்கும் போது அதிகபட்சம் 8.5% வரை சலுகை கிடைக்கும். ஒவ்வொரு ரூ.100 செலவில் 15 பெட்ரோல் பாயின்ட்ஸ் வழங்கப்படும். இதன் மதிப்பு சுமார் 7.5%. கூடுதலாக 1% பெட்ரோல் சர்சார்ஜ் விலக்கு உண்டு. மேலும், ஒரு மாதத்தில் 2,000 பாயின்ட்ஸ் வரை பெறலாம். அதாவது மாதம் ரூ.13,333 வரை பெட்ரோல் வாங்கும் செலவில் இந்த சலுகை பொருந்தும்.
ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ்
கார்டு பெற்ற 30 நாட்களுக்குள் ரூ.500 செலவிட்டால் 3,000 பாயின்ட்ஸ் வழங்கப்படும். 1 பாயின்ட் மதிப்பு ரூ.0.50 ஆகும். இதை இந்தியாயில் பெட்ரோல் நிலையங்களில் நேரடியாக பெட்ரோலாகப் பயன்படுத்தலாம். இதைத் தவிர, உணவகம், ஷாப்பிங் முதலியவற்றிலும் 2 பாயின்ட்ஸ் வழங்கப்படும். ஆண்டு கட்டணம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உடன்), ஆனால் வருடத்தில் ரூ.2.75 லட்சம் செலவிட்டால் அந்த கட்டணம் விலக்கப்படும்.
பெட்ரோல் சேமிப்பு
மொத்தத்தில், IndianOil RBL Bank XTRA Credit Card என்பது அடிக்கடி பெட்ரோல் வாங்குபவர்களுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டாகும். பாயின்ட்ஸ், சர்சார்ஜ் விலக்கு மற்றும் மைல்ஸ்டோன் போனஸ் மூலம் ஆண்டுக்கு 250 லிட்டர் வரை பெட்ரோலை இலவசமாகப் பெறும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.