MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • OYO, GPay Business வாடிக்கையாளர்களே உஷார்.. இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!

OYO, GPay Business வாடிக்கையாளர்களே உஷார்.. இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!

கூகுளின் ஜெமினி AI API கீகளில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK வெளிப்படுத்தியுள்ளது. இது பயனர்களுக்குத் தரவு தனியுரிமை அபாயங்களையும், டெவலப்பர்களுக்கு நிதி இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 11 2026, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அபாயத்தில் ஓயோ தகவல்கள்
Image Credit : Google

அபாயத்தில் ஓயோ தகவல்கள்

கூகுளின் ஜெமினி AI தொடர்பாக ஒரு முக்கியமான பாதுகாப்பு குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் CloudSEK தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் பயன்படுத்தப்படும் API கீ அமைப்பில்தான் இந்த சிக்கல் உள்ளது. முன்பு அடையாளம் காட்டும் ஒரு கருவியாக இருந்த API கீகள், இப்போது கூடுதல் அனுமதிகளைப் பெறுவதுதான் பிரச்சினையின் மையமாக உள்ளது. இந்த குறைபாடு எப்படி வேலை செய்கிறது என்பது கவலைக்கிடமான ஒன்று.

24
கூகுள் ஏஐ
Image Credit : Getty

கூகுள் ஏஐ

சில API கீகளை ஆப்ஸ் கோடில் சேர்ப்பது பாதுகாப்பானது என்று கருதப்பட்டாலும், அவை ஜெமினி AI உடன் இணைக்கப்பட்ட பிறகு வேறு விதமாக செயல்படும். குறிப்பாக ஜெனரேட்டிவ் லாங்குவேஜ் API இயக்கப்பட்டவுடன், அந்த கீகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைத்து, பல்வேறு சேவைகளுக்கு அணுகும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த விஷயத்தை Truffle Security முன்பே கண்டுபிடித்திருந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வுகளின் அடிப்படையில், CloudSEK இந்த பிரச்சினையை விரிவாக விளக்கியுள்ளது. இதனால், ஒரு சாதாரண API கீ கூட பெரிய பாதுகாப்பு அபாயமாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

Related Articles

Related image1
காடு, மலை என எங்கிருந்தாலும் போன் பேசலாம்! மொபைல் நெட்வொர்க் உலகையே மாற்றப்போகும் ஸ்டார்லிங்கின் புதிய டெக்னாலஜி!
Related image2
மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!
34
ஆண்ட்ராய்டு ஆப்ஸ்
Image Credit : Getty

ஆண்ட்ராய்டு ஆப்ஸ்

மேலும், ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை டீகம்பைல் செய்ய தெரிந்தவர்களுக்கு இந்த API கீகளை எளிதாக பெற முடியும். இதனால் பயனர்கள் பகிரும் படங்கள், ஆடியோ, டாக்குமென்ட்கள் போன்ற தகவல்கள் ஆபத்துக்கு உள்ளாகலாம். AI உரையாடல்களில் சேமிக்கப்பட்ட தகவல்களும் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். CloudSEK-ன் BeVigil சோதனையில், 10,000 பிரபல ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் 22 ஆப்ஸ்களில் 32 லைவ் API கீகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் OYO Hotels, Google Pay for Business, Apna Job Search App போன்ற பெரிய ஆப்ஸ்களும் அடங்கும். இந்த ஆப்ஸ்கள் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுவது கவலை அதிகரித்துள்ளது.

44
ஏபிஐ பயன்பாடு
Image Credit : Getty

ஏபிஐ பயன்பாடு

இந்த பிரச்சினை டெவலப்பர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். API பயன்பாடு கட்டண அடிப்படையில் உள்ளது, கீகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் நிதி இழப்பு வெளிச்சத்திற்கு. இதைத் தவிர்க்க API கீகளை அடிக்கடி மாற்றுவது, அனுமதிகளை கட்டுப்படுத்துவது, மற்றும் ஆப்ஸ் கோடிகளை நேரடியாக சேமிக்காமல் இருப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பயனர்களும் நம்பகமான தளங்களையே பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான ஆலோசனையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
OYO
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
2026-ல் இதெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை
Recommended image2
இனி சிலிண்டர் தேவையில்லை.. கேஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த 4 லட்சம் இந்தியர்கள்.. என்ன நடந்தது?
Recommended image3
Gold Loan: ஒரு கிராம் தங்கத்துக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் தெரியுமா?! அம்மாடியோ.! கணக்க கேட்டா துள்ளி குதிப்பீங்க.!
Related Stories
Recommended image1
காடு, மலை என எங்கிருந்தாலும் போன் பேசலாம்! மொபைல் நெட்வொர்க் உலகையே மாற்றப்போகும் ஸ்டார்லிங்கின் புதிய டெக்னாலஜி!
Recommended image2
மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved