மாருதி முதல் சன் பார்மா வரை: லாபம் தரும் பங்குகள்?
பங்கு சந்தையில் அசாதாரண மாற்றங்கள் நடக்கும் நிலையில், முன்னணி ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் சில முக்கிய பங்குகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளன.

4 முக்கிய பங்குகள்
கோல்டுமேன் சாக்ஸ், மாருதி பங்கை வாங்கப் பரிந்துரைத்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் புதிய மாடல்களால் நிறுவனம் பயனடையும். இதன் EPS மதிப்பீடு 12% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இலக்கு விலை ரூ.18,900. ஸ்விக்கி பங்கிற்கு மோர்கன் ஸ்டான்லி ரூ.450, நோமுரா ரூ.550 இலக்கு விலை நிர்ணயித்துள்ளன. ராபிடோ பங்குகளை விற்று நிதிநிலையை வலுப்படுத்தியுள்ளது.
சன் பார்மா
இன்ஸ்டாமார்ட் வணிகப் பரிமாற்றமும் நன்மை தரும். கோல்டுமேன் சாக்ஸ், அசோக் லேலண்ட் பங்கை 'நியூட்ரல்' என குறைத்து, இலக்கு விலையை ரூ.140 ஆக நிர்ணயித்துள்ளது. சமீபத்திய ஏற்றத்தால், இனி வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என கூறியுள்ளது. ஜெஃப்ரீஸ் நிறுவனம் சன் பார்மா பங்கை வாங்கப் பரிந்துரைத்து, இலக்கு விலையாக ரூ.2,070 நிர்ணயித்துள்ளது. ஸ்பெஷாலிட்டி வணிகம் மார்ஜினை மேம்படுத்தியுள்ளது.
முதலீட்டு டிப்ஸ்கள்
புதிய ஆலைகள் நிறுவனத்தின் ரிஸ்க்கை குறைக்கும். சிட்டி டேட்டா நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியை விற்கப் பரிந்துரைத்து, இலக்கு விலையாக ரூ.765 நிர்ணயித்துள்ளது. மைக்ரோஃபைனான்ஸ் காரணமாக ஸ்லிப்பேஜ்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.