MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Business
  • FD vs SIP: 2026-ல் உங்கள் பணத்தை எங்கே போட்டால் அதிக லாபம்?

FD vs SIP: 2026-ல் உங்கள் பணத்தை எங்கே போட்டால் அதிக லாபம்?

FD vs SIP: பணம் முதலீடு செய்ய நினைப்பவர்களுடைய முக்கிய கேள்வியே FD போடலாமா? இல்ல SIP தொடங்கலாமா? என்பதுதான். இதற்கு முதலீட்டு காலம், வருமானத் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயாரா ? என்பதுதான் சரியான தேர்வை நிர்ணயிக்கும்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 27 2026, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முதலீட்டின் தன்மை
Image Credit : magnific

முதலீட்டின் தன்மை

FD (Fixed Deposit): உங்களிடம் இருக்கும் தொகையை வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வது. இதில் முக்கியமான விஷயம், எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும். அதாவது அந்த காலத்திற்கான வட்டி விகிதம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

SIP (Systematic Investment Plan): SIP என்பது மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்யும் முறை. SIP-யில் கிடைக்கும் வருமானம் உறுதியானது அல்ல. அது முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வருமானம் – உறுதியா, சந்தையைப் பொறுத்ததா?
Image Credit : magnific

வருமானம் – உறுதியா, சந்தையைப் பொறுத்ததா?

FD: முதலீடு செய்யும் போது வட்டி விகிதம் தெரியும். சமீபத்தில் RBI வெளியிட்ட தரவுகளின்படி, 2026 ஜூலை இறுதியில் ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட டெர்ம் டெபாசிட்களின் வட்டி விகிதம் சுமார் 6.00% முதல் 6.75% வரை இருந்தது. ஆனால் வட்டி விகிதத்தை ஒவ்வொரு வங்கியும் நிர்ணயிக்கிறது. எனவே வங்கி மற்றும் கால அவகாசத்தைப் பொறுத்து இது மாறுபடும்.

SIP: இதில் நிரந்தர வட்டி கிடையாது. நீங்கள் தேர்வு செய்யும் மியூச்சுவல் ஃபண்டின் NAV (Net Asset Value) மற்றும் முதலீடுகளின் செயல்திறனைப் பொறுத்து லாபமும், நஷ்டமும் ஏற்படும். இதில் கடந்த காலத்தில் பெற்ற வருமானம் எதிர்கால வருமானத்திற்கான உத்தரவாதம் அல்ல என்று SEBI விதிமுறைகளும் தெளிவுபடுத்துகின்றது.

Related Articles

Related image1
RBI New FD Rules: அக்டோபர் 1 முதல் FD விதிகளில் மாற்றம்.. RBI அதிகாரப்பூர்வ தகவல்கள்
Related image2
LIC-க்கு அடித்த ஜாக்பாட்.! RBI-யிடம் இருந்து வந்த சூப்பர் அறிவிப்பு.! செம குஷியில் முலீட்டாளர்கள்!
36
பாதுகாப்பு – யார் முன்னிலை?
Image Credit : magnific

பாதுகாப்பு – யார் முன்னிலை?

FD: FD குறைந்த ரிஸ்க் முதலீடு. தகுதியான வங்கிகளில் DICGC மூலம், அசல் + வட்டி சேர்த்து ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு உள்ளது. 5 லட்சத்துக்கு மேல் உள்ள தொகைக்கு DICGC-யின் இதே காப்பீட்டு பாதுகாப்பு கிடையாது.

SIP: SIP-யில் வருமானம் உத்தரவாதம் இல்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்து லாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம்.சில சமயங்களில் முதலீடு செய்த பணத்தில் ஒரு பகுதி அல்லது முழுத் தொகையையும் இழக்கும் அபாயமும் உள்ளது.

46
FD சிறந்ததா?
Image Credit : magnific

FD சிறந்ததா?

  1. ஓய்வு பெற்றவர்கள் அல்லது 1–3 ஆண்டுகளில் பணம் தேவைப்படுபவர்கள்.
  2. சந்தை ஏற்ற, இறக்கத்தை சமாளிக்க விருப்பமில்லாதவர்கள்.
  3. குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள்.
56
SIP சிறந்ததா?
Image Credit : magnific

SIP சிறந்ததா?

  1. 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்கள்.
  2. மாதந்தோறும் சிறிய தொகையிலிருந்து முதலீடு செய்ய விரும்புபவர்கள்.
  3. சந்தை ஏற்ற, இறக்கத்தை ஏற்கத் தயாராக இருப்பவர்கள்.
  4. மியூச்சுவல் ஃபண்டின் ரிஸ்க் அளவைப் புரிந்துகொண்டு முதலீடு செய்பவர்கள்.
66
இறுதி முடிவு
Image Credit : magnific

இறுதி முடிவு

FD அல்லது SIP – இதில் ஒன்று மட்டுமே சிறந்தது என்று கூற முடியாது. பாதுகாப்பு மற்றும் உறுதியான வருமானத்திற்கு FD ஐயும், நீண்டகால முதலீட்டிற்கு SIP பொருத்தமாக இருக்கலாம். உங்களுக்கு பணம் எப்போது தேவை, முதலீட்டின் இலக்கு என்ன என்பதை பொறுத்து 2026-ல் FD அல்லது SIP-யா என்று சரியான ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
வணிக யோசனை
நிலையான வைப்பு வட்டி விகிதம்
எஸ்ஐபி வருமானம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
10 Rupee Note Bundle: மொய் வைக்க 10 ரூபாய் நோட்டுகள் தேவையா? பேங்க்ல இப்படி ஈஸியா வாங்கலாம்!
Recommended image2
Money Management: பாக்கெட்டை காலி பண்ற 'சைலன்ட் கில்லர்' செலவுகள்... பணம் பெருக சாணக்கியர் தரும் 5 பொன்னான ரகசியங்கள்!
Recommended image3
House Construction : 1000 சதுர அடியில் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!
Related Stories
Recommended image1
RBI New FD Rules: அக்டோபர் 1 முதல் FD விதிகளில் மாற்றம்.. RBI அதிகாரப்பூர்வ தகவல்கள்
Recommended image2
LIC-க்கு அடித்த ஜாக்பாட்.! RBI-யிடம் இருந்து வந்த சூப்பர் அறிவிப்பு.! செம குஷியில் முலீட்டாளர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved