RBI New FD Rules: அக்டோபர் 1 முதல் FD விதிகளில் மாற்றம்.. RBI அதிகாரப்பூர்வ தகவல்கள்
FD rules: அக்டோபர் 1, 2026 முதல் FD மற்றும் வங்கி டெபாசிட் விதிகளில் மாற்றம். ஒரே தொகைக்கு ஒரே வட்டி, Bulk Deposit வட்டி வெளியீடு உள்ளிட்ட RBI புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

RBI கொண்டுவந்துள்ள புதிய விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளில் டெபாசிட் மற்றும் குறிப்பாக நிலையான வைப்பு நிதி - Fixed Deposit (FD) வட்டி விகிதங்களை வெளியிடுதல் மற்றும் நிர்ணயித்தல் தொடர்பான விதிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை வருகிற அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருவுள்ளதாக RBI அதிகாபூர்மாக தெரிவித்துள்ளது.
ஒரே மாதிரியான FD என்றால், அனைவருக்கும் ஒரே வட்டி
வங்கிகள் தங்கள் அனைத்து கிளைகளிலும் ஒரே தேதியில், ஒரே வகையான FD-யில் பெறப்படும் வைப்புத்தொகைகளுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை வழங்க வேண்டும். கிளைக்கு கிளை வட்டி விகிதங்களில் இனி மாறுபாடு இருக்காது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வங்கிகளின் FD வட்டி நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான நடைமுறையை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
வட்டி விகிதங்களை முன்கூட்டியே வெளியிடுதல்
வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை தங்களது இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட வேண்டும். அறிவிக்கப்பட்ட வட்டி அட்டவணைக்கு ஏற்ப வட்டி வழங்கப்பட வேண்டும்.
Bulk Deposit-க்கு தினசரி அறிவிப்பு
மொத்த வைப்புத்தொகைக்கான (Bulk Deposit) வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாட்களிலும் காலை 10 மணிக்கு வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். தொழில்நுட்ப காரணங்களுக்காக 10 நிமிட சலுகை நேரத்துடன் காலை 10.10 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும். ரூபாய் 3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை Bulk Deposit என வகைப்படுத்தப்படுகிறது.
Bulk FD-க்கு வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம்
Commercial Banks மற்றும் Small Finance Banks போன்ற நிறுவனங்களுக்கு, LCR (Liquidity Coverage Ratio) கட்டமைப்பின் கீழ் பொருந்தும் run-off rate உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, Bulk Deposit-களுக்கு வேறுபட்ட வட்டி விகிதங்களை வழங்க வங்கிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இனி FD செய்வதற்கு முன்பு, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட வட்டி விகிதங்களை சரிபார்த்து ஒப்பிடுவது மேலும் எளிதாகும்.
வெளிப்படத்தன்மை
இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மை. ஒரே மாதிரியான டெபாசிட்டுகளுக்கு ஒரே வட்டி நடைமுறை மற்றும் Bulk Deposit வட்டி நிர்ணயத்தில் வங்கிகளுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மை வழங்குவதாகும். சாதாரண ரீடெயில் FD முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வட்டி உயர்வு அல்லது குறைவு கட்டாயம் இல்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

