MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு - 5 ஆண்டுகளில் இவ்ளோ கிடைக்குமா?

FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு - 5 ஆண்டுகளில் இவ்ளோ கிடைக்குமா?

ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) திட்டங்கள் பாதுகாப்பான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகின்றன. பணவீக்கத்தை ஈடுகட்ட உதவும் FD-கள், முதலீட்டு போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப கால அளவைத் தேர்வு செய்யலாம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 03 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
உறுதியான வருமானம் FD
Image Credit : freepik

உறுதியான வருமானம் FD

வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) அல்லது நிலையான வைப்பு திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான வருமானத்தை அளிக்கும் முக்கிய முதலீட்டு தேர்வாக உள்ளன. இருப்பினும், தற்போதைய பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடும் போது FD-இன் வருமானம் அதிகமாக இல்லாதாலும், இது ஒரு நபரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்த உதவுகிறது. FD-களில் முதலீடு செய்யும் நபர்களுக்கு ஒரே விகிதத்தில் உறுதியான வருமானம் கிடைப்பது, மற்றும் தேவையான கால அவகாசத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பது போன்ற பலன்களால், FD-கள் மக்களிடையே பிரபலமானவை.

29
மாறுபடும் வங்கி வட்டி விகிதங்கள்
Image Credit : our own

மாறுபடும் வங்கி வட்டி விகிதங்கள்

முன்னணி வங்கிகள் ஒவ்வொன்றும் தங்கள் FD வட்டி விகிதங்களை வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கின்றன. இது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் போது மாற்றம் அடையும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகள் போன்ற உயர் ஆபத்துள்ள முதலீடுகளுடன் ஒப்பிடும்போது ஃபிக்ஸ்ட் டெபாசிட் குறைந்த லாபம் தரலாம். ஆனால், முதலீட்டு பாதுகாப்பு தேவைப்படும் நபர்களுக்கு FD ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

Related Articles

Related image1
அதிக வட்டி தரும் எஸ்பிஐ அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டம்.. சம்பாதிக்க அருமையான வாய்ப்பு.. முழு விபரம் இதோ !!
Related image2
வட்டிகளை வாரி வழங்கும் வங்கிகள்.. மூத்த குடிமக்களுக்கு அதிக வருமானம் தரும் எஃப்டி திட்டங்கள்
39
₹5 லட்சம் FD – 5 ஆண்டுகள் @ 6.75% வட்டி
Image Credit : iSTOCK

₹5 லட்சம் FD – 5 ஆண்டுகள் @ 6.75% வட்டி

முதலீடு செய்யும் தொகை: ₹5,00,000

காலம்: 5 ஆண்டுகள்

வட்டி விகிதம்: வருடத்திற்கு 6.75%

மொத்த வட்டி வருமானம்: ₹1,98,000

மொத்த மீளளிப்பு தொகை: ₹6,98,000

49
ஒவ்வோரு நிதி ஆண்டில் கிடைக்கும் வட்டி வருமானம்
Image Credit : iSTOCK

ஒவ்வோரு நிதி ஆண்டில் கிடைக்கும் வட்டி வருமானம்

முதல் ஆண்டு – ரூ.30,335

இரண்டாம் ஆண்டு – ரூ.36,715

மூன்றாம் ஆண்டு - ரூ.39,339

நான்காம் ஆண்டு –ரூ.₹41,889

ஐந்தாம் ஆம்டு - ரூ.44,879

இறுதியாண்டு (பகுதி ஆண்டு) ரூ. ரூ.5,593

59
FD யாருக்கு பொருத்தம்?
Image Credit : iSTOCK

FD யாருக்கு பொருத்தம்?

முதலீட்டின் பாதுகாப்பை விரும்புபவர்கள்

குறுகிய/நடுத்தர கால நிதி இலக்குகள் உள்ளவர்கள்

வருமான வரி விலக்கு பெறும் வகையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் (80C கீழ்)

69
FD-க்கு தேவையான ஆவணங்கள்
Image Credit : our own

FD-க்கு தேவையான ஆவணங்கள்

அடையாளச் சான்று – PAN கார்டு, ஆதார், வோட்டர் ஐடி

முகவரி சான்று – மின்சாரம்/தொலைபேசி பில், பாஸ்போர்ட் புகைப்படம்

பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்

வங்கி FD-க்கு புதிய கணக்கு என்றால், KYC தேவைப்படும்.

79
யார் FD-யில் முதலீடு செய்ய வேண்டும்?
Image Credit : freepik

யார் FD-யில் முதலீடு செய்ய வேண்டும்?

சந்தை ஆபத்தைத் தவிர்க்க விரும்புவோர்

வருமான வரியை குறைக்க விரும்புவோர்

ஓய்வுபெற்றோர், நிலையான வருமானம் தேவைப்படும் நபர்கள்

சிறிய முதலீட்டாளர்கள்

89
 சரியான FD-ஐ எப்படி தேர்வு செய்வது?
Image Credit : freepik

சரியான FD-ஐ எப்படி தேர்வு செய்வது?

பல வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிடவும்.

கூட்டு FD அல்லது நேரடி வட்டி FD தேர்வு செய்ய விருப்பத்தைப் பரிசீலிக்கவும்.

வங்கியின் நம்பகத்தன்மையை (CRISIL, ICRA மதிப்பீடு) பார்வையிடவும்.

வங்கி சேவைகளின் எளிமை மற்றும் வாடிக்கையாளர் ஆதரவை மதிப்பீடு செய்யவும்.

99
FD கணக்கு எப்படி தொடங்குவது?
Image Credit : freepik

FD கணக்கு எப்படி தொடங்குவது?

ஆன்லைன் வழி

வங்கியின் இணையதளத்திற்குச் சென்று லாகின் செய்யவும்.

தேவையான விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தால், KYC மீண்டும் தேவைப்படாது.

 ஆஃப்லைன் வழி

வங்கி கிளைக்கு சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

பணத்தை செலுத்தி ரசீது பெறவும்.

KYC ஆவணங்களை கொண்டு செல்லவும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
நிலையான வைப்பு வட்டி விகிதம்
நிலையான வைப்பு நிதி
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved