MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சென்னை முதல் கேரளா வரை பயணம் இப்போது ஈஸி.. ஸ்பெஷல் டிரெயின் ரெடி.!

சென்னை முதல் கேரளா வரை பயணம் இப்போது ஈஸி.. ஸ்பெஷல் டிரெயின் ரெடி.!

தெற்கு ரெயில்வே, கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இது ரெயில் பயணிகளுக்கு நல்ல செய்தியாக மாறியுள்ளது. இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 01 2026, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னை திருவனந்தபுரம் ரெயில்
Image Credit : Train\IndianRailways

சென்னை திருவனந்தபுரம் ரெயில்

தெற்கு ரெயில்வே சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக, பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அறிவித்துள்ளது. கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

25
சிறப்பு ரெயில் 2026
Image Credit : stockPhoto

சிறப்பு ரெயில் 2026

அதன்படி, எண் 06113 கொண்ட சிறப்பு ரெயில் ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த ரெயில் அடுத்த நாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை சென்றடையும். இந்த சேவை, சென்னை மற்றும் கேரளா இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Related image1
வந்தே பாரத் இல்லை... இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா? ஆண்டுக்கு 176 கோடியாம்..!
Related image2
ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடைக்காதா? ரயில்வே அதிரடி ரூல்.. ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்
35
கேரளா ரெயில் சேவை
Image Credit : Meta AI

கேரளா ரெயில் சேவை

இதற்கு பதிலாக, எண் 06114 கொண்ட திருவனந்தபுரம் வடக்கு – சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்படும். இந்த ரெயில் அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். இரு திசைகளிலும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நேர அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது.

45
சென்னை எழும்பூர் ரெயில்
Image Credit : Meta AI

சென்னை எழும்பூர் ரெயில்

இந்த சிறப்பு ரெயில்கள் பல முக்கிய நிலையங்களில் நிறுத்தம் அளிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், கட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த ரெயில்கள் நிற்கின்றன.

55
ரெயில் நேர அட்டவணை
Image Credit : our own

ரெயில் நேர அட்டவணை

பயணிகள் முன்பதிவு செய்து இந்த சிறப்பு சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் முயற்சியாக இந்த கூடுதல் ரெயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
தமிழ்நாடு
கேரளா
ரயில்
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு..! முதல் நாளிலேயே ஷாக் கொடுக்கும் சிலிண்டர் விலை.. வணிகர்கள் அதிர்ச்சி
Recommended image2
ATM-ல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்.. HDFC, PNB வங்கிகளின் புதிய விதிகள் இதோ!
Recommended image3
பான் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது.. புது ரூல்ஸ்
Related Stories
Recommended image1
வந்தே பாரத் இல்லை... இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா? ஆண்டுக்கு 176 கோடியாம்..!
Recommended image2
ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடைக்காதா? ரயில்வே அதிரடி ரூல்.. ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved