MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO 3.0: 7 கோடி PF உறுப்பினர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்னென்ன?

EPFO 3.0: 7 கோடி PF உறுப்பினர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்னென்ன?

EPFO 3.0 benefits for EPF members: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் EPFO ​​3.0 ஐ அறிவித்தது. இதன் மூலம் 7 கோடி EPF உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது.

2 Min read
Author : SG Balan
| Updated : Jan 16 2025, 01:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
EPFO 3.0

EPFO 3.0

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் EPFO ​​3.0 ஐ அறிவித்தது. இதன் மூலம் ஓய்வூதிய நிதி அமைப்பில் சில பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அவை 7 கோடி EPF உறுப்பினர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
EPFO 3.0 New System

EPFO 3.0 New System

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் EPFO ​​3.0 வெளிவரும் என்பதை உறுதிப்படுத்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் EPFO ​​உறுப்பினர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் என்று கூறினார்.

37
EPFO 3.0 Waiting time

EPFO 3.0 Waiting time

EPFO 3.0, தற்போதுள்ள அமைப்பில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை உறுதி செய்யும், குறிப்பாக PF திரும்பப் பெறும் நேரம் மற்றும் பயனர் அனுபவத்தில் பெரிய மாறுதல் உருவாகும். ​​இப்போது, EPF உறுப்பினர்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் கோரிக்கைகளை சமர்ப்பித்த பிறகு பணம் எடுப்பதற்காக 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், அவர்கள் முதலாளியிடம் சான்றளிக்கும்படி கேட்கப்படுகிறார்கள்.

47
EPFO 3.0 UMANG

EPFO 3.0 UMANG

ஊழியர்கள் தற்போது தங்கள் EPF கணக்குகளை நிர்வகிக்க UAN போர்டல் அல்லது UMANG செயலியையே நம்பியுள்ளனர். ஆனால் புதிய முயற்சியானது, செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கி எளிமைப்படுத்துகிறது. அவற்றை பயனர் பயன்படுத்த ஏற்ற வகையநில் மாற்றும்.

57
EPFO 3.0 Withdrawal

EPFO 3.0 Withdrawal

புதிய அமைப்பு ஏடிஎம் மூலம் பணம் எடுக்க அனுமதிக்கும் அதே வேளையில், நீங்கள் எவ்வளவு எடுக்கலாம் என்பதற்கும் வரம்புகள் இருக்கும். இப்போது போலல்லாமல், உறுப்பினர்கள் பணத்தை எடுப்பதற்கு ஒப்புதல் பெறும் ​​செயல்முறை முழுவதுமாக தானியங்கி முறையில் மாற்றப்படும். நீண்ட ஆன்லைன் படிவங்களை நிரப்பவேண்டிய தேவை இருக்காது.

இருப்பினும், உறுப்பினர்கள் தங்கள் முழு சேமிப்பையும் எடுக்க முடியாது. EPFO நிதி நியாயமாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுப்பினர்களின் நீண்ட காலத் தேவைகளுக்குக் கிடைக்கும்படியும் வரம்புகள் இருக்கும்.

67
EPFO 3.0 ATM Card

EPFO 3.0 ATM Card

மொபைல் செயலி அறிமுகம்: வரவிருக்கும் EPFO ​​மொபைல் செயலியானது உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கை முன்னெப்போதையும் விட வசதியாக நிர்வகிக்க உதவும். இருப்புத்தொகையைச் பார்ப்பது, பணம் எடுப்பதற்கான கோரிக்கைகளைத் தாக்கல் செய்வது வரை போன்ற அனைத்தையும் இதன் மூலம் செய்யலாம்.

ATM அட்டை: முதல் முறையாக, EPFO ​​உறுப்பினர்கள் பிரத்யேக ATM கார்டைப் பெறுவார்கள். அதைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும். அவசரத் தேவைகளுக்கு பணம் வேண்டுமென்றால், உங்கள் EPF சேமிப்பை ஏடிஎம்மில் இருந்து எடுக்கலாம்.

77
EPFO 3.0 members

EPFO 3.0 members

PF பணத்தை எடுப்பதற்கான ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. சிக்கலான செயல்முறைகளும் இருக்காது. மொபைல் ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் EPF கணக்கை நிர்வகிக்கலாம். அவசர நிதி நெருக்கடிகளின்போது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வருங்கால வைப்பு நிதி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved