MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • யானை பலம் கொண்ட ரயில் சக்கரங்கள்.. அதன் எடையும் விலையும் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

யானை பலம் கொண்ட ரயில் சக்கரங்கள்.. அதன் எடையும் விலையும் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

ரயிலை இழுத்துச் செல்லும் இன்ஜின்கள் (Locomotives) அதிக சக்தியைத் தர வேண்டியிருப்பதால், அதன் சக்கரங்கள் மிகவும் வலுவாகவும் கனமாகவும் வடிவமைக்கப்படுகின்றன.

2 Min read
Author : Rayar r
Published : Apr 02 2026, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியன் ரயில்வே
Image Credit : x

இந்தியன் ரயில்வே

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

24
ரயில் சக்கரத்தின் ரகசியங்கள்
Image Credit : Google

ரயில் சக்கரத்தின் ரகசியங்கள்

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். ஆனால், ரயிலைப் பொறுத்தவரை அந்த தண்டவாளத் தடத்தில் சக்கரம் உருளும் சத்தமே ஒரு தனி சுகம் தான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஷயங்களில் ரயிலுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. நவீன காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், ரயில்வே கேட் மூடப்படும்போது அந்த இரும்புச் சக்கரங்களின் வேகத்தை வேடிக்கை பார்க்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ரயிலின் ஆதாரமான சக்கரங்கள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில ரகசியங்களை பார்க்கலாம்.

Related Articles

Related image1
ரயில் டிக்கெட் கேன்சல்.! இப்படி பண்ணா ரீ ஃபண்ட் கிடைக்காது.! பொதுமக்கள் வயிற்றில் அடிக்கும் ரயில்வே.! ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்.!
Related image2
ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்.. பணத்தை மிச்சப்படுத்த இந்த 4 புதிய ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!
34
ரயில் சக்கரத்தின் எடை
Image Credit : Google

ரயில் சக்கரத்தின் எடை

ரயில் சக்கரம் என்றாலே அது கனமானது என்று நமக்குத் தெரியும். ஆனால், அதன் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? இந்திய எஃகு ஆணையத்தின் (SAIL) தரவுகளின்படி, ரயிலின் வகையைப் பொறுத்து சக்கரங்களின் எடை மாறுபடும்.

புறநகர் ரயில்கள் (MEMU/EMU): சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ஓடும் இந்த ரயில்களின் ஒரு சக்கரம் சுமார் 423 கிலோ எடை கொண்டது.

சாதாரண பெட்டிகள்: பயணிகள் ரயிலின் சாதாரணப் பெட்டிகளில் உள்ள ஒரு சக்கரத்தின் எடை 384 முதல் 394 கிலோ வரை இருக்கும்.

LHB பெட்டிகள்: அதிவேகமாகச் செல்லும் சிவப்பு நிற (LHB) பெட்டிகளில் சக்கரத்தின் எடை சற்று குறைவாக, அதாவது 326 கிலோ ஆக இருக்கும்.

ரயிலை இழுத்துச் செல்லும் இன்ஜின்கள் (Locomotives) அதிக சக்தியைத் தர வேண்டியிருப்பதால், அதன் சக்கரங்கள் மிகவும் வலுவாகவும் கனமாகவும் வடிவமைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தி

டீசல் இன்ஜின்: ஒரு சக்கரம் 528 கிலோ. மின்சார இன்ஜின்: ஒரு சக்கரம் 554 கிலோ. ஒப்பிட்டுப் பார்த்தால், குறுகிய பாதையில் (Meter Gauge) ஓடும் ரயில்களின் சக்கரம் வெறும் 144 கிலோ மட்டுமே இருக்கும். ரயில் சக்கரங்கள் தயாரிப்பது சாதாரணமான காரியம் அல்ல. இந்தியாவில் இதன் உற்பத்தி இப்போதுதான் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு வரை அதிகளவில் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன.

44
ரயில் சக்கரத்தின் விலை
Image Credit : Google

ரயில் சக்கரத்தின் விலை

ஒரு ரயில் சக்கரத்தின் தோராயமான விலை ரூ.70,000 ஆகும். ஒரு ரயில் பெட்டியில் 8 சக்கரங்கள் இருக்கும். அதாவது ஒரு பெட்டியின் சக்கரங்களுக்கே மட்டும் சுமார் ₹5.6 லட்சம் செலவாகும். 24 பெட்டிகள் கொண்ட ஒரு முழு ரயிலின் சக்கரங்களின் மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால், அது பல கோடிகளைத் தாண்டும். தற்போது இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கிச் சென்றுள்ளது. முன்னதாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்திருந்த நாம், இப்போது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே சக்கரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தான பத்திரம் என்றால் என்ன? சொத்தை தானமாக வழங்க முடியுமா? யார் யாருக்கு சொத்தை தானமாக வழங்க முடியும்?
Recommended image2
LPG: கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி தள்ளுபடி! ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி?
Recommended image3
ஜனவரி 1-க்கு பதிலாக ஏப்ரல் 1-ல் ஏன் நிதியாண்டு தொடங்குகிறது தெரியுமா? ஆங்கிலேயர்கள் மறைத்துச் சென்ற சுவாரசியமான பின்னணி.!
Related Stories
Recommended image1
ரயில் டிக்கெட் கேன்சல்.! இப்படி பண்ணா ரீ ஃபண்ட் கிடைக்காது.! பொதுமக்கள் வயிற்றில் அடிக்கும் ரயில்வே.! ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்.!
Recommended image2
ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்.. பணத்தை மிச்சப்படுத்த இந்த 4 புதிய ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved