MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மழைக்காலம் வரப்போகுது - இந்த தொழில்கள் மூலம் லாபம் கொட்டும்!

மழைக்காலம் வரப்போகுது - இந்த தொழில்கள் மூலம் லாபம் கொட்டும்!

சொந்தமா தொழில் தொடங்கணும்னு நினைக்கிறீங்களா? மழைக்காலம் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மக்களின் தேவைகளை அறிந்து, உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தைத் தொடங்குங்கள். குறைந்த முதலீட்டில் மழைக்காலத்தில் செய்யக்கூடிய சிறந்த வணிக யோசனைகள் இங்கே காணலாம். 

3 Min read
Dinesh TG
Published : Sep 03 2024, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rainy Season Business

Rainy Season Business

குடை விற்பனை

மழைக்காலம் என்று வந்தாலே நாம் முதலில் யோசிப்பது குடைகளும், குளிரை போக்கவோ அல்லது நனையாமல் இருக்கவோ தோடுவது மழைக்கால ஆடைகள் தான். குடை மற்றும் கம்பளி ஆடைகள் தேவையில்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை, இல்லையா? அதனால்தான் மழைக்காலத்தில் இந்த தொழில் உங்களுக்கு அருமையான லாபத்தைத் தரும். மழைக்கால ஆடைகள், குடைகளை நீங்களே தயாரித்து சந்தையில் விற்கலாம். அல்லது மொத்தமாக வாங்கி உள்ளூர் சந்தையில் விற்கலாம். 

மழைக்கால ஆடைகள், குடைகள் விற்பனை தொழிலை நீங்கள் வெறும் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கலாம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மொத்த விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் சென்று தேவையான பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது குறைந்த விலையில் கிடைக்கும். அப்படி வாங்கி வரும் குடைகள், மழைக்கால ஆடைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளுக்கும், அல்லது நீங்களே ஒரு கடை விரித்து 20 சதவீத லாபத்தில் விற்கலாம்.

அதேவேளையில், உங்களுக்கு தையல் தெரிந்திருந்தால் நீங்களே குடைகள் மற்றும் மழைக்கால ஆடைகளைத் தயாரித்து விற்கலாம். இதன் மூலம் மேலும் லாபம் ஈட்டலாம். மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் மழைக்கால ஆடைகள், குடைகளுக்கான மூலப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து நீங்களே சொந்தமாகத் தயாரிக்கலாம். இதனால் செலவு மேலும் குறையும். இந்த தொழிலை மழைக்காலம் கடந்தும் நீங்கள் சற்று பெரிய அளவிலும் வணிகத்தை மேற்கொள்ள முடியும். ஒரு சிறிய குடிசைத் தொழில் போல் ஆரம்பித்து நடத்தலாம். இந்த தொழில் மூலம் நீங்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு மட்டுமல்லாமல், வேறு நான்கு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவர்களாகவும் இருப்பீர்கள்.  

25

மழைக்கால சிறப்பு உணவகம்

குறைந்த முதலீட்டில் உடனடி லாபம் வேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக உணவு தொழிலை தொடங்கலாம். குறிப்பாக மழைக்காலத்தில் குளிர்ந்த சூழ்நிலைக்கு அனைவரும் சூடான உணவைச் சாப்பிட விரும்புவார்கள். உங்களுக்கு சமையல் தெரிந்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் ஒரு நல்ல சமையல்காரரை வைத்துக்கொண்டு சூடான பஜ்ஜி, பக்கோடா போன்ற சிற்றுண்டிகளைத் தயாரித்து விற்றால் உங்களுக்கான லாபம் அன்றே கிடைக்கும்.

இதற்காக நீங்கள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியதில்லை. மக்கள் அதிகம் கூடும் இடத்தைத் தேர்ந்தெடுத்து வெறும் ரூ.1 லட்சம் முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கலாம். இடம் கிடைக்காவிட்டால் உங்கள் வீட்டினுள் சமைத்து, வீட்டின் முன்பே சிறுகடை விரித்து விற்பனையும் செய்யலாம். செலவுகள், லாபங்களைக் கணக்கிட்டு தேவைக்கேற்ப முதலீட்டை அதிகரிக்கலாம்.

35

பராமரிப்பு சேவைகள்

மழைக்காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சனை, வீடு மற்றும் அலுவலக கூரை, சுவர்களில் இருந்து தண்ணீர் கசிவது. இதனுடன் பிளம்பிங் வேலைகளும் இந்த சமயத்தில்தான் அதிகமாகத் தேவைப்படும். இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு சேவை மையம் அமைத்தால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.  

இந்த தொழில் குறிப்பாக நகரங்கள், புறநகர்ப் பகுதிகளில் உங்களுக்கு நன்றாகப் பலனளிக்கும்.  வீடுகளில் தண்ணீர் கசியாமல் தடுக்கும் வேலை உங்களுக்குக் கிடைத்தால் இந்த சீசனில் உங்களுக்கு நல்ல தேவை இருக்கும். இல்லையென்றால் அந்த வேலை தெரிந்த தொழிலாளர்களை வைத்துக்கொண்டு இந்த வணிகத்தைத் தொடங்கலாம். இந்த வணிகம் வெற்றி பெற வேண்டுமென்றால் விளம்பரம் செய்வது மிகவும் முக்கியம். இணையதள விளம்பரங்கள் கொடுப்பது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்வது போன்றவற்றைச் செய்ய வேண்டும். உங்களுக்கு வேலை வந்தால் முதலீடு இல்லாமலேயே இந்த வணிகத்தைத் தொடங்கலாம். அல்லது நான்கு தொழிலாளர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து நடத்தலாம்.  

45

மழைநீர் சேகரிப்பு அமைத்தல்

சுற்றுச்சூழ விழிப்புணர்வு அதிகரித்து வரும் இக்காலத்தில் மழைநீர் சேகரிப்பு என்பது அவசியமாகிவிட்டது. அரசும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்கும் தொழிலைத் தொடங்குவது லாபகரமானது.  

இந்த வணிகத்தைத் தொடங்க உங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. மழைநீர் சேகரிப்பு குறித்த பயிற்சியைப் பெற்று, தேவையான கருவிகளை வாங்கி வணிகத்தைத் தொடங்கலாம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இந்த அமைப்புகளை ஏற்படுத்தலாம்.

ரூ.10 ரூபாய் இருந்தாலே லட்சாதிபதி ஆகலாம்.. மாதம் 300 ரூபாய் சேமித்து பணக்காரர் ஆவது எப்படி?
 

55

தனித்துவமான செடிகள் விற்பனை

செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற காலம் மழைக்காலம். இந்த சீசனில் எந்த வகையான செடியும் எளிதில் வளரும். இதையே நீங்கள் தொழிலாகவும் மாற்றலாம். உங்கள் பகுதியில் நாற்றுப் பண்ணை அமைப்பதன் மூலம் நீங்கள் செடிகளை விற்கலாம்.

அதேபோல் நான்கு தொழிலாளர்களை வைத்து டிராலி போன்ற வாகனங்களில் செடிகளை ஏற்றிக்கொண்டு சிறு சிறு, கிராமங்களுக்குச் சென்று விற்பனை செய்யலாம். இதுவும் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்தான். உங்களுக்கென சொந்தமாக இடம், ஷெட் இருந்தால் வெறும் செடிகள் வாங்குவதற்கு மட்டும் முதலீடு செய்தால் போதும். இந்த வகையில் ரூ.1 லட்சத்தில் கூட இந்த வணிகத்தைத் தொடங்கலாம்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved