இந்த ஒரு ரூபாய் நோட்டு இருந்தா போதும்! ரூ.7 லட்சம் உடனே கிடைக்கும்!
1935ஆம் ஆண்டு வெளியான அப்போதைய பிரிட்டிஷ் இந்தியா கவர்னர் ஜே.டபிள்யூ கெல்லியின் கையெழுத்து போட்ட ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் ரூ.7 லட்சம் சம்பாதிக்கலாம்.
One Rupee Note
1935ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு இருந்தால், ஆன்லைன் ஏலத்தில் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அப்போதைய கவர்னர் ஜே.டபிள்யூ கெல்லியின் கையெழுத்துடன் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் நீங்கள் உடனே லட்சாதிபதி ஆகிவிடலாம்.
Old one rupee note
நீங்கள் பழைய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பவராக இருந்தால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்தான். பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. சில ஆன்லைன் ஏலத்தில் பழைய ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் பல லட்சம் ரூபாய்க்கு விலை போகின்றன.
1935 one rupee note
பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டுக்கு சாட்சியாக இருக்கும் ஒரு தளம் காயின் பஜார். அங்கு பலர் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை, கணிசமான தொகைக்கு விற்றுள்ளனர். 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளைக்கூட இந்தத் தளத்தில் விற்பனைக்கு வைத்தால் பெரிய லாபம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் ஏலத்தில் ஒரு ரூபாய் நோட்டின் மூலம் ரூ.7 லட்சம் வரை கூட பெறலாம்.
JW Kelly one rupee note
ஒரு ரூபாய் நோட்டுக்கு எப்படி இவ்வளவு அதிக விலை கிடைக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. 29 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு 1 ரூபாய் நோட்டு அச்சிடுவதை நிறுத்திவிட்டது. 2015ஆம் ஆண்டில் ஒரு ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் வெளியிடப்பட்ட 1 ரூபாய் நோட்டுக்கு அதிக விலை கொடுத்து வாங்க பல நாணய சேகரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
7 lakh worth One Rupee Note
பிரிட்டிஷ் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு அரிய ரூபாய் நோட்டை வாங்க பல நாணய சேகரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். அப்போதைய கவர்னர் ஜே. டபிள்யூ. கெல்லியின் (JW Kelly) கையொப்பத்துடன் 1935 இல் ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமையான இந்த 1 ரூபாய் நோட்டு, அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக ரூ. 7 லட்சம் வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகிவிடலாம்.
RBI on Old Currency Auction
பழைய மற்றும் அரிதான ரூபாய் நோட்டுகளை விற்க ஆர்வமுள்ளவர்களுக்கு, Coin Bazaar, Quikr போன்ற ஆன்லைன் தளங்கள் ஏலம் மற்றும் விற்பனைக்கான வழிகளை வழங்குகின்றன. ஆனால், பழைய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கவோ விற்கவோ இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வமாக அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.