MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Iran Oil: 'ஈரானின் எண்ணெய்யை பிடுங்குவோம்' - டிரம்பின் மிரட்டலால் உலகம் ஷாக்! என்னதான் திட்டம்?

Iran Oil: 'ஈரானின் எண்ணெய்யை பிடுங்குவோம்' - டிரம்பின் மிரட்டலால் உலகம் ஷாக்! என்னதான் திட்டம்?

ஈரானின் எண்ணெய் வளத்தின் மீது தனது பார்வை இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 30 2026, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிரம்ப் சூசகம்
Image Credit : Getty

டிரம்ப் சூசகம்

அமெரிக்கா, ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான 'கார்க் தீவை' (Kharg Island) கைப்பற்றலாம் என டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் இந்த தீவு வழியாகத்தான் உலக நாடுகளுக்குச் செல்கிறது. ஒரு பேட்டியில், "அந்தத் தீவில் ஈரானிடம் எந்த பாதுகாப்பும் (Defence) இல்லை, அதை நாங்கள் மிக எளிதாகக் கைப்பற்றிவிடுவோம்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
25
டிரம்ப் வெறும் மிரட்டலோடு நிறுத்தவில்லை
Image Credit : ANI

டிரம்ப் வெறும் மிரட்டலோடு நிறுத்தவில்லை

டிரம்ப் வெறும் மிரட்டலோடு நிறுத்தவில்லை, ஒரு கெடுவையும் விதித்துள்ளார். ஈரான் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் (எண்ணெய் தளங்கள்) மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதுவரை ஈரானின் 13,000 தளங்களை அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்துள்ளதாகவும், இன்னும் 3,000 இலக்குகள் மீதமிருப்பதாகவும் டிரம்ப் உரிமை கோரியுள்ளார்.

Related Articles

Related image1
Crude Oil Prices: அடிமாட்டு விலைக்கு கிடைக்குமா கச்சா எண்ணெய்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன?!
Related image2
கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?
35
தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புகள்
Image Credit : Getty

தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புகள்

தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. பென்டகன் (Pentagon), சுமார் 10,000 வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 3,500 ராணுவ வீரர்கள் மற்றும் 2,200 மரைன் கமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை அன்று அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் படைப்பிரிவு, குறிப்பாக 'நிலப்பரப்பைக் கைப்பற்றி, அதைத் தக்கவைப்பதற்காக' பயிற்சி பெற்றவர்கள்.
45
டிரம்ப் போடும் ஆட்டம்பாம்ப்
Image Credit : Getty

டிரம்ப் போடும் ஆட்டம்பாம்ப்

ஈரானில் பழைய ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் மற்றொரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மரணத்திற்குப் பிறகு, தற்போது புதிய மற்றும் திறமையான நபர்கள் ஆட்சியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், காமெனியின் மகன் முஜ்தபா காமெனி ஒன்று இறந்திருக்கலாம் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம் என்றும், அவரைப் பற்றி நீண்ட காலமாக எந்த தகவலும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
55
பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரலாம்
Image Credit : X

பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரலாம்

டிரம்பின் இந்த ஆக்ரோஷமான போக்கால் உலக சந்தையில் அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு பேரலுக்கு 116 டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது 50% உயர்வாகும். ஒருவேளை கார்க் தீவு மீது தாக்குதல் நடந்தால், உலகின் எண்ணெய் விநியோகச் சங்கிலி முடங்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரலாம். கார்க் தீவைத் தாக்குவது ஆபத்தானது என்றும், இது போரை நீண்ட காலத்திற்கு இழுத்துச் சென்று அமெரிக்க வீரர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஈரான்
டொனால்ட் டிரம்ப்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mileage Tips: இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... வண்டி மைலேஜ் குறைய 100% கேரண்டி!
Recommended image2
ஏப்.1 முதல் மொத்தமாக மாறப்போகும் விதிமுறை..! வங்கியில் பணம் செலுத்துவதில் புதிய கட்டுப்பாடு..
Recommended image3
பைக் இருந்தா போதும்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஸ்மார்ட்டா வருமானம் ஈட்ட இவ்ளோ வழிகள் இருக்கா?
Related Stories
Recommended image1
Crude Oil Prices: அடிமாட்டு விலைக்கு கிடைக்குமா கச்சா எண்ணெய்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன?!
Recommended image2
கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved