80% வரை தள்ளுபடி.. டிமார்ட் பொங்கல் சேல் தொடக்கம்.. என்னவெல்லாம் வாங்கலாம்?
டிமார்ட் நிறுவனம் ஜனவரி 2026 பொங்கலை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், பொங்கல் பண்டிகை பொருட்கள், மளிகை சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக சாதனங்களுக்கு 20% முதல் 80% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டிமார்ட் பொங்கல் சலுகை
ஜனவரி 2026-ஐ வரவேற்கும் வகையில் டிமார்ட் நிறுவனம் பொங்கலை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சலுகைகள் குடும்பத் தேவைகள், பண்டிகை பொருட்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு பொருட்களை குறைந்த விலையில் வாங்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக புத்தாண்டு மற்றும் பொங்கல் காலத்தில் செலவுகள் அதிகரிக்கும் நிலையில், இந்த சலுகைகள் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியை தருகின்றன.
டிமார்ட் ஜனவரி சேல்
இந்த ஜனவரி சிறப்பு விற்பனையில் பொங்கல்க்குத் தேவையான வெல்லம், இனிப்புகள் போன்ற பண்டிகை சார்ந்த பொருட்களுக்கு நல்ல தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதனால் பாரம்பரிய விழாவை சிக்கனமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடிகிறது. ஒரே இடத்தில் அனைத்து விழா தேவைகளும் கிடைப்பது வாங்குபவர்களுக்கு கூடுதல் வசதி உள்ளது.
டிமார்ட் மளிகை சலுகை
மேலும், சமையலறை உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் மீதும் டிமார்ட் கவனம் செலுத்தியுள்ளது. மிக்சர், கிரைண்டர், இன்டக்ஷன் அடுப்பு, குக்கர், பாத்திரங்கள் உள்ளிட்ட பல குறைந்த பொருட்கள் விலையில் கிடைக்கின்றன. புதிய சமையலறை சாதனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.
டிமார்ட் வீட்டு உபயோக பொருட்கள்
இதற்கு கூடுதலாக, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதும் பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள், பாக்கெட் உணவுகள் போன்ற சலுகை விலையில் கிடைப்பதால் மாத செலவுகளை குறைக்க முடியும். சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஜனவரி 2026 சலுகைகள்
இந்த டிமார்ட் ஜனவரி 2026 பொங்கல் சிறப்பு விற்பனை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதால், அருகிலுள்ள டிமார்ட் கடைகளுக்குச் சென்று சலுகைகளைப் பயன்படுத்தலாம். பொருட்கள் கிடைக்கும் அளவு மற்றும் தள்ளுபடி விகிதம் கடை வாரியாக மாறுபடும். பண்டிகை கால சலுகைகளை தவறவிடாமல் பயன்படுத்தி புத்தாண்டை சிக்கனமாக தொடங்க இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

