- Home
- Business
- உங்கள் ரகசியங்களை பாதுகாக்கும் டிஜிட்டல் key.! நல்ல Password Manager உங்களுக்கான வழிகாட்டி.!
உங்கள் ரகசியங்களை பாதுகாக்கும் டிஜிட்டல் key.! நல்ல Password Manager உங்களுக்கான வழிகாட்டி.!
Password Manager-ஐ உள்நுழைவு குறியீடுகளுக்கு மட்டுமல்ல, டெபாசிட் விவரங்கள், வங்கி கணக்கு எண்கள் போன்ற முக்கிய தகவல்களையும் பாதுகாப்பாகச் சேமிக்க பயன்படுத்தலாம். இவை 'emergency access'-ஐயும் வழங்குகின்றன,

டிஜிட்டெல் உலகில் பாதுகாப்பு அவசியம்
எந்த ஒரு இணையதளம் அல்லது ஆப்- உள்ளே நுழையும் போது நாம் பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்லை பயன்படுத்துகிறோம். அதில் நாம் பெரும்பாலும் Password Manager-ஐ உள்நுழைவு குறியீடுகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அதைவிட முக்கியமான பல ரகசிய தகவல்களை நம் தினசரி வாழ்க்கையில் சேமித்து வைக்க வேண்டும். அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதற்கான சிறந்த வழி – ஒரு நம்பகமான Password Manager ஆகும். சிறந்த பா்வேர்டு மேனேஜர் நம்முடைய தகவல்களை பாதுகாப்பாக செகரிக்க உதவும்.
பாதுகாப்பு அவசியம் தானே!
இன்றைய டிஜிட்டல் உலகில், பாஸ்வேர்டுகள் மட்டுமல்லாமல், டெபாசிட் விவரங்கள், வங்கி கணக்கு எண்கள், பான் மற்றும் ஆதார் நகல்கள், குழந்தையின் மருத்துவக் காப்பீடு விவரங்கள், வீட்டுச் சொத்து விவரங்கள், வேலை தொடர்பான முக்கிய டாக்யூமெண்ட்கள் போன்றவை அனைத்தும் நமக்கு தேவைப்படும் தருணங்களில் விரைவாக கிடைக்க வேண்டும். இவற்றை அனைத்தையும் ஒரே இடத்தில், பாதுகாப்பாக வைத்திருக்க Password Manager பயனளிக்கிறது.
இதனை தெரிந்து வைத்துக்கொள்ளவும்!
ஒரு நாள் நாம் இல்லை என்றாலும், குடும்பத்தினருக்கு இந்த முக்கிய தகவல்களை ஒரு குறிப்பிட்ட "emergency access" மூலம் கொடுக்கவும் இந்த மென்பொருட்கள் உதவுகின்றன. சில password manager-கள் “zero-knowledge architecture” மூலம் வேலை செய்யும். அதாவது, உங்கள் தரவை encryption செய்யும் key கூட உங்களிடம்தான் இருக்கும்; சேவை வழங்குநருக்கும் அது தெரியாது.
நீங்கள் எளிதாக Store செய்து வைத்திருக்கலாம்
இது மட்டுமல்லாமல், encrypted notes, private files, bank locker combination, credit card PIN, Wi-Fi password போன்றவற்றையும் நீங்கள் எளிதாக Store செய்து வைத்திருக்கலாம். இதனால், ஒவ்வொரு விஷயத்திற்கும் தனி அடைவுகள் வைத்திருக்கும் சிக்கலையும் தவிர்க்கலாம்.
ஒரு dedicated Password Manager-க்கு மாறுவது அவசியம்
Microsoft Authenticator போன்ற சில apps, வரும் ஆகஸ்ட் 1-இல் password storage வசதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. எனவே, விரைவில் ஒரு dedicated Password Manager-க்கு மாறுவது அவசியம். Bitwarden, 1Password, Dashlane, NordPass, Zoho Vault போன்றவை மிகவும் பாதுகாப்பானவை மற்றும் நிறுவனம் தரும் வாடிக்கையாளர் ஆதரவும் சிறந்தது.
மிகவும் தேவை என்பதை விட மிக்க அவசியம்
மொத்தத்தில், உங்களுடைய Digital Secret Locker ஆக Password Manager பயன்படுத்தும் பழக்கத்தை இன்று இருந்து துவங்குங்கள். உள்நுழைவுகளுக்கே அல்ல, வாழ்க்கையின் அனைத்து முக்கிய தருணங்களுக்கும் இது ஒரு பாதுகாப்பான துணைதான்.