MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • LPG -ஆ, PNG-ஆ? எதிர்கால எரிபொருள் கிங் யாரு? எரிவாயு தட்டுப்பாட்டை வெல்லுமா இயற்கை எரிவாயு? LPG - CNG - PNG - LNG முக்கிய வேறுபாடுகள் இதோ.!

LPG -ஆ, PNG-ஆ? எதிர்கால எரிபொருள் கிங் யாரு? எரிவாயு தட்டுப்பாட்டை வெல்லுமா இயற்கை எரிவாயு? LPG - CNG - PNG - LNG முக்கிய வேறுபாடுகள் இதோ.!

Difference between LPG CNG PNG LNG : இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய எரிவாயுக்களான LPG, CNG, PNG, LNG ஆகியவற்றின் 4 எரிவாயுக்கள் குறித்தும், அதில் உள்ள முக்கிய வேறுபாடுகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 05 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Difference between LPG CNG PNG LNG
Image Credit : Gemini AI

Difference between LPG CNG PNG LNG

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிசக்தி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாலும் இந்தியாவில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் எரிவாயு சீராக கிடைப்பதற்கு மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 ஐ பயன்படுத்தி வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

26
LPG - CNG - PNG - LNG முக்கிய வேறுபாடுகள்
Image Credit : Gemini AI

LPG - CNG - PNG - LNG முக்கிய வேறுபாடுகள்

மேலும் வணிக சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து, வீட்டுக்கு தேவையான சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எல்பிஜி (LPG), சிஎன்ஜி(CNG), பிஎன்ஜி(PNG), எல்என்ஜி(LNG) போன்ற எரிவாயுகளின் வேறுபாடுகள் குறித்தும், அவை எதற்காக பயன்படுகின்றன, அவை சேமிக்கப்படும் விதம் ஆகியவை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
Induction Stove: கேஸ் சிலிண்டரை விட சீப் & ஃபாஸ்ட்! கரண்ட் பில் எகிறாம சமைக்க சூப்பர் டிப்ஸ்!
Related image2
LPG-க்கு மாற்றாக வருகிறது PNG.! இனி 24 மணிநேரமும் கேஸ் சப்ளை கிடைக்கப்போகுது.! முழு விவரம் இதோ.!
36
எல்பிஜி (LPG) - Liquefied Petroleum Gas
Image Credit : Chat gpt

எல்பிஜி (LPG) - Liquefied Petroleum Gas

நமது நாட்டில் நான்கு வகையான எரிவாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நாம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் கேஸ் எல்பிஜி (LPG) என்று அழைக்கப்படுகிறது. எல்பிஜி என்றால் (Liquefied Petroleum Gas) அதாவது ‘திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு’. இது கச்சா எண்ணெயும் சுத்திகரிக்கப்படும் செய்யும்பொழுது உபரி பொருளாக கிடைக்கிறது. பெரும்பாலும் ப்ரொபேன் மற்றும் பியூட்டேன் இரண்டின் கலவையாகும். அதிக அழுத்தத்தில் திரவமாக மாற்றப்பட்டு சிலிண்டர்களில் அடைக்கப்படுகிறது. சமையல் மற்றும் சில வாகன எரிவாயுவாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 9 சதவீதத்திற்கும் அதிகமான எல்பிஜி சிலிண்டர்கள் வீட்டு உபயோகத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் எல்பிஜி தேவை, இறக்குமதியே அதிகம் நம்பியுள்ளது.

46
சிஎன்ஜி (CNG) - Compressed Natural Gas
Image Credit : Getty

சிஎன்ஜி (CNG) - Compressed Natural Gas

சிஎன்ஜி (CNG) - Compressed Natural Gas என்பது ‘அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு’ ஆகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகன எரிபொருளாக அறியப்படுகிறது. இயற்கை வாயுவை அதிக அழுத்தத்தில் சுமார் 200 முதல் 250 bar சுருக்குவதன் மூலம் இந்த எரிவாயு கிடைக்கிறது. இதில் முக்கியமாக மீத்தேன் உள்ளது. LPG ஐ ஒப்பிடும் போது மிகவும் லேசானது. கசிவு ஏற்பட்டால் இது காற்றில் விரைவாக கலந்துவிடும். எனவே பாதுகாப்பு அதிகம். ஆட்டோ, கார், பேருந்து ஆகியவற்றில் எரிபொருள்களாக சிஎன்ஜி பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலை ஒப்பிடும்பொழுது சுற்றுச்சூழலை மிகவும் பாதுகாக்கிறது.

56
பிஎன்ஜி (PNG) - Piped Natural Gas
Image Credit : ChatGPT

பிஎன்ஜி (PNG) - Piped Natural Gas

பிஎன்ஜி (Piped Natural Gas) ‘குழாய் வழி இயற்கை எரிவாயு’. இதுவும் சிஎன்ஜி யை போல இயற்கை எரிவாயு தான். ஆனால் இதை விநியோகிக்கும் முறை வேறு மாதிரியானது. சிலிண்டர்களில் அடைக்கப்படாமல் நிலத்தடிகளில் குழாய்கள் பதித்து அதன் மூலம் நேரடியாக வீடுகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதன் முக்கிய நன்மை சிலிண்டர் தீர்ந்து விடும் என்கிற கவலை கிடையாது. பயன்படுத்திய அளவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஓரிரு பகுதிகளில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. தடையில்லாத தொடர்ச்சியான விநியோகம் இருப்பதாலும், சிலிண்டர்களை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததாலும், மின்சாரம் போல பயன்படுத்தி அளவுக்கு மட்டுமே பணம் செலுத்துவதாலும் இது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

66
எல்என்ஜி (LNG) - Liquefied Natural Gas
Image Credit : stockPhoto

எல்என்ஜி (LNG) - Liquefied Natural Gas

எல்என்ஜி (Liquefied Natural Gas) என்பது ‘திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு’ ஆகும். இது இயற்கை எரிவாயுவின் அடர்த்தியான வடிவமாகும். இயற்கை எரிவாயு மிகக் குளிர்ந்த வெப்ப நிலையில் அதாவது (-162) டிகிரி வரை குளிர்விக்கும் பொழுது அது திரவமாக மாறுகிறது. திரவமாக இருக்கும் பொழுது வாயு நிலையை விட 600 மடங்கு குறைவான இடத்தைப் பிடிக்கும். இதனால் கப்பல் அல்லது லாரிகள் மூலம் நீண்ட தூரம் கொண்டு செல்லப்படுகிறது. இது கனரக வாகனங்களான லாரிகள், கப்பல்கள் போன்றவற்றில் எரிபொருளாக பயன்படுகிறது. மேலும் தொழிற்சாலை உள்ளிட்ட சில இடங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியா பெரும்பாலும் தனது தேவையில் பாதிக்கும் அதிகமான தேவையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவற்றிக்கு பிற நாடுகளை நம்பியே இருக்கிறது. இதில் கத்தார் போன்ற நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. துறைமுகங்களில் உள்ள முனையங்கள் மூலம் வாயுவாக மாற்றப்பட்டு குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
எரிவாயு உருளை
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Warren Buffett: சீக்கிரம் பணக்காரர் ஆகணுமா? இந்த 5 பழக்கத்தையும் இன்னைக்கே விடுங்க!
Recommended image2
விதிகளை மீறிய ஜியோ.. ஏப்ரல் 14 வரைக்கும் தான் டைம்.. டிராய் கடும் எச்சரிக்கை
Recommended image3
"கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி தள்ளுபடி! ₹300 குறைப்பு - உடனே முந்துங்கள்!"
Related Stories
Recommended image1
Induction Stove: கேஸ் சிலிண்டரை விட சீப் & ஃபாஸ்ட்! கரண்ட் பில் எகிறாம சமைக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
LPG-க்கு மாற்றாக வருகிறது PNG.! இனி 24 மணிநேரமும் கேஸ் சப்ளை கிடைக்கப்போகுது.! முழு விவரம் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved