MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Induction Stove: கேஸ் சிலிண்டரை விட சீப் & ஃபாஸ்ட்! கரண்ட் பில் எகிறாம சமைக்க சூப்பர் டிப்ஸ்!

Induction Stove: கேஸ் சிலிண்டரை விட சீப் & ஃபாஸ்ட்! கரண்ட் பில் எகிறாம சமைக்க சூப்பர் டிப்ஸ்!

Induction Stove Tips : கேஸ் சிலிண்டர் விலை ஏறிக்கிட்டே போகுதா? கிச்சன் பட்ஜெட் தாறுமாறா ஆகுதா? இதுக்கு பதிலா இன்டக்‌ஷன் ஸ்டவ் யூஸ் பண்ணலாம்னா, கரண்ட் பில் எகிறிடுமோன்னு பயமா இருக்கா? ஆனா, சரியா யூஸ் பண்ணா கேஸை விடவும் செலவு கம்மிதான்!

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 26 2026, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இங்கே சில எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ்
Image Credit : Asianet News

இங்கே சில எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ்

சமீபகாலமா கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, சப்ளைல இருக்கற நிச்சயமற்ற தன்மை காரணமா, நடுத்தர வர்க்க குடும்பங்கள் இன்டக்‌ஷன் ஸ்டவ் பக்கம் திரும்பியிருக்காங்க. ஆனா, 'இன்டக்‌ஷன் யூஸ் பண்ணா கரண்ட் பில் அதிகமாகுமோ?'னு ஒரு பயம் நிறைய பேருக்கு இருக்கு. உண்மையில, இன்டக்‌ஷன் ஸ்டவ்களை சரியா பயன்படுத்தினா, அது கேஸை விடவும் சிக்கனமானது, வேகமானதும் கூட. உங்க கரண்ட் பில்லை குறைக்க, இதோ சில ஈஸி டிப்ஸ்.
27
1. சரியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது
Image Credit : stockPhoto

1. சரியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது

கரண்ட் பில்லை மிச்சப்படுத்த முதல் ஸ்டெப்பே, சரியான பாத்திரத்தை தேர்ந்தெடுக்கிறதுதான். எப்பவும் தட்டையான அடிப்பாகம் உள்ள, இன்டக்‌ஷனுக்கு ஏற்ற பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துங்க. வளைஞ்ச, மெல்லிசான பாத்திரங்கள் சூடாக அதிக நேரம் எடுக்கும், இதனால கரண்ட் வேஸ்ட் ஆகும். கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்கள் சீக்கிரமா சூட்டை இழுத்து, சமையலை வேகமா முடிக்கும்.

Related Articles

Related image1
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Related image2
LPG Cylinder : கேஸ் சிலிண்டர் ஏன் 14 கிலோ இல்லாம, கரெக்டா 14.2 கிலோ இருக்கு? இதுதான் சீக்ரெட்.! இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணங்கள் இருக்கா?
37
2. பவர் செட்டிங்ஸை சரியாகப் பயன்படுத்துதல்
Image Credit : pinterest

2. பவர் செட்டிங்ஸை சரியாகப் பயன்படுத்துதல்

இன்டக்‌ஷன்ல இருக்கிற ஒவ்வொரு 'மோட்'-ஐயும் சரியா பயன்படுத்துறது ரொம்ப முக்கியம். எல்லாத்தையும் ஒரே சூட்டுல சமைக்காதீங்க. பால் காய்ச்ச 'Milk' மோட் யூஸ் பண்ணுங்க. காய்கறி வதக்கும்போது, முதல்ல அதிக வாட்ஸ்ல (High Wattage) தாளிச்சிட்டு, உடனே வாட்ஸை குறைச்சிடுங்க. இது தேவையில்லாத கரண்ட் செலவை தடுக்கும்.
47
3. மூடி போட்டு சமைத்தல்
Image Credit : Getty

3. மூடி போட்டு சமைத்தல்

இது ரொம்ப சிம்பிளான, ஆனா சூப்பரா வேலை செய்யுற ஒரு டெக்னிக். சமைக்கும்போது பாத்திரத்தை மூடி (Lid) வெச்சா, உள்ள இருக்கிற நீராவி உணவை சீக்கிரமா வேக வைக்கும். சமையல் சீக்கிரம் முடிஞ்சா, உங்க கரண்ட் பில்லும் குறையும்.
57
4. இரண்டு நிமிடம் முன்பே அணைத்துவிடுங்கள்
Image Credit : Asianet News

4. இரண்டு நிமிடம் முன்பே அணைத்துவிடுங்கள்

இன்டக்‌ஷனை ஆஃப் பண்ணதுக்கு அப்புறமும், அதோட பிளேட்டும் பாத்திரமும் ரொம்ப நேரத்துக்கு சூடா இருக்கும். சமையல் முடியுறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடியே ஸ்விட்சை ஆஃப் பண்ணிடுங்க. அந்த மிச்சமிருக்கிற சூட்டுலயே உணவு நல்லா வெந்து, சரியான பதத்துக்கு வந்துடும். இது ஒரு ஸ்மார்ட்டான சேமிப்பு வழி.
67
5. சமைப்பதற்கு முன்பே தயாராகுங்கள்
Image Credit : Amazon.in

5. சமைப்பதற்கு முன்பே தயாராகுங்கள்

கேஸை விட இன்டக்‌ஷன்ல சாப்பாடு ரொம்ப வேகமா வேகும். அதனால, இன்டக்‌ஷனை ஆன் பண்ணிட்டு காய்கறி வெட்டவோ, மசாலா தேடவோ போகாதீங்க. சமையலுக்குத் தேவையான எல்லாத்தையும் முதல்லயே ரெடி பண்ணிட்டு, அப்புறமா ஸ்விட்ச் ஆன் பண்ணா, கரண்ட் வேஸ்ட் ஆகுறதை தடுக்கலாம்.
77
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
Image Credit : Glen

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

இன்டக்‌ஷன் மேல பாத்திரத்தை வைக்கிறதுக்கு முன்னாடி, பாத்திரத்தோட அடிப்பாகம் ஈரமில்லாம உலர்ந்து இருக்கானு செக் பண்ணிக்கோங்க. ஈரமா இருந்தா, அது சூட்டை உறிஞ்சுறதுக்கு தடையா இருக்கும், இன்டக்‌ஷன் பிளேட் பழுதாக வாய்ப்பிருக்கு.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
எரிவாயு உருளை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Male Fertility: ஆண்களே உஷார்.! இந்த இந்த ஒரு உணவு உங்க கருவுறுதல் திறனை பாதிக்குமாம்.! ஆய்வு முடிவில் அதிர்ச்சி.!
Recommended image2
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Recommended image3
Uric Acid: இரவில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்படினா.. யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கலாம்!
Related Stories
Recommended image1
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Recommended image2
LPG Cylinder : கேஸ் சிலிண்டர் ஏன் 14 கிலோ இல்லாம, கரெக்டா 14.2 கிலோ இருக்கு? இதுதான் சீக்ரெட்.! இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணங்கள் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved