MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • DA Hike Good News: அகவிலைப்படி 63% ஆகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! மாத சம்பளத்தில் எவ்வளவு கூடும்?

DA Hike Good News: அகவிலைப்படி 63% ஆகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! மாத சம்பளத்தில் எவ்வளவு கூடும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2026 முதல் 3% DA உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. 60% முதல் 63% ஆக உயர்ந்தால் சம்பளத்தில் எவ்வளவு கூடும், நிலுவைத் தொகை கிடைக்குமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 06 2026, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தீவாவளிக்கு முன்பே இனிப்பு சாப்பிடலாம்.!
Image Credit : Pixabay

தீவாவளிக்கு முன்பே இனிப்பு சாப்பிடலாம்.!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து வரும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜூலை மாதத்திற்கான DA திருத்தத்தில் சுமார் 3 சதவீத புள்ளிகள் உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தற்போது 60 சதவீதமாக உள்ள DA, 63 சதவீதமாக உயரலாம். அப்ப தீவாவளிக்கு முன்பே இனிப்பு சாப்பிடலாமாம்தானே.! இதையும் படிக்கலாமே - 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு பரிந்துரை தாமதமானால் ரூ.3.32 லட்சம் வரை நஷ்டம்! யாருக்கு பாதிப்பு?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ஜூலை 2026 முதல் அமலாகுமா?
Image Credit : stockPhoto

ஜூலை 2026 முதல் அமலாகுமா?

7வது ஊதியக் குழு நடைமுறையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மாற்றம், அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான CPI-IW தரவுகள் அடிப்படையில் ஜூலை 2026 DA விகிதம் சுமார் 63 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்படலாம்.

ஆனால், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் வரை இந்த உயர்வை உறுதி செய்யப்பட்டதாக கருத முடியாது. இதையும் படிக்கலாமே -8th Pay Commission: ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம் மாசம் ரூ.68,000 பென்ஷன் கிடைக்குமா?

38
60% முதல் 63% ஆக DA உயர்வு?
Image Credit : stockPhoto

60% முதல் 63% ஆக DA உயர்வு?

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 60 சதவீத DA/DR வழங்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் 3 சதவீத புள்ளி உயர்வு அமலுக்கு வந்தால், அது 63 சதவீதமாக அதிகரிக்கும்.

உதாரணமாக, ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், தற்போது 60% DA அடிப்படையில் ரூ.30,000 கிடைக்கிறது. DA 63% ஆக உயர்ந்தால், அது ரூ.31,500 ஆக அதிகரிக்கும். இதனால் DA தொகையில் மட்டும் மாதத்திற்கு ரூ.1,500 கூடுதல் கிடைக்கும். இதையும் படிக்கலாமே - TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!

48
சம்பளத்தில் எவ்வளவு கூடும்0?
Image Credit : Gemini

சம்பளத்தில் எவ்வளவு கூடும்0?

DA உயர்வு அடிப்படை சம்பளத்தைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக DA உயர்ந்தால், அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் அளவுக்கு கூடுதல் DA கிடைக்கும். உதாரணமாக, ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு மாதம் ரூ.540 கூடுதலாகவும், ரூ.25,000 சம்பளத்திற்கு ரூ.750 கூடுதலாகவும், ரூ.50,000 சம்பளத்திற்கு ரூ.1,500 கூடுதலாகவும் கிடைக்கும். அதேபோல், ரூ.75,000 அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு ரூ.2,250-ம், ரூ.1 லட்சம் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு மாதம் ரூ.3,000 வரையும் கூடுதல் DA கிடைக்கலாம். இருப்பினும், கையில் கிடைக்கும் நிகர சம்பள உயர்வு வருமான வரி, ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் இதர பிடித்தங்கள் காரணமாக ஊழியருக்கு ஊழியர் மாறுபடலாம். இதையும் படிக்கலாமே -Gold Investment: தினமும் ரூ.100 மட்டும்! தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு இதோ ஒரு எளிய சேமிப்பு வழி!

58
ஜூலை முதல் நிலுவைத் தொகை கிடைக்குமா?
Image Credit : Pixabay

ஜூலை முதல் நிலுவைத் தொகை கிடைக்குமா?

DA உயர்வு ஜூலை 1, 2026 முதல் அமல்படுத்தப்பட்டு, அரசு அறிவிப்பு பின்னர் வெளியாகும் பட்சத்தில், இடைப்பட்ட மாதங்களுக்கான நிலுவைத் தொகை (Arrears) கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக, உயர்வு அக்டோபரில் அறிவிக்கப்பட்டு சம்பளத்தில் சேர்க்கப்பட்டால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான வித்தியாசத் தொகை பின்னர் வழங்கப்படலாம்.

எனினும், நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும், எத்தனை மாதங்களுக்கு வழங்கப்படும் என்பதற்கான இறுதி முடிவு அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின் அடிப்படையில்தான் இருக்கும். இதையும் படிக்கலாமே - VDA Hike: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111.! அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய சம்பளம்.! அதிரடியாக உயர்ந்த VDA!

68
CPI-IW குறியீடு ஏன் முக்கியம்?
Image Credit : stockPhoto

CPI-IW குறியீடு ஏன் முக்கியம்?

மத்திய அரசு ஊழியர்களின் DA கணக்கீட்டில் CPI-IW முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்துறை தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மாற்றங்களை இந்தக் குறியீடு பிரதிபலிக்கிறது.

2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாத DA கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கணக்கீட்டு விகிதம் சுமார் 63.75 சதவீதமாக வந்தாலும், நடைமுறையில் செலுத்தப்படும் DA விகிதம் 63 சதவீதமாக இருக்கலாம். இதையும் படிக்கலாமே - 8th Pay Commission Arrears: 8-வது ஊதியக் குழு தாமதமானால் எவ்வளவு அரியர்ஸ் கிடைக்கும்? லட்சங்களில் பணம்!

78
அடுத்த DA உயர்வு எப்போது?
Image Credit : Getty

அடுத்த DA உயர்வு எப்போது?

ஜூலை 2026 DA திருத்தத்திற்குப் பிறகு அடுத்த கவனம் ஜனவரி 2027 DA உயர்வை நோக்கியே இருக்கும். அதற்கான கணக்கீட்டில் 2026 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான CPI-IW தரவுகள் முக்கியமானதாக இருக்கும்.

எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது முக்கியமான எதிர்பார்ப்பு ஜூலை 2026 DA உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.

88
ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
Image Credit : our own

ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

3 சதவீத புள்ளி DA உயர்வு எதிர்பார்க்கப்பட்டாலும், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிடும் வரை இது உறுதி செய்யப்பட்ட உயர்வு அல்ல. அறிவிப்பு வெளியான பிறகே புதிய DA விகிதம், அமல்படுத்தும் தேதி மற்றும் நிலுவைத் தொகை குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும்.

DA உயர்வு அமலுக்கு வந்தால், அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து ஒவ்வொரு ஊழியருக்கும் மாதாந்திர வருமானத்தில் கூடுதல் தொகை கிடைக்கும். குறிப்பாக, குறைந்த அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கும் அதிக அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கும் அவரவர் Basic Pay அடிப்படையில் DA உயர்வு மாறுபடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிக யோசனை
வணிகம்
வணிக உரிமையாளர்
முதலீடு
முதலீடு
DA அதிகரிப்பு
அகவிலைப்படி உயர்வு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parle-G: 1994 முதல் விலை பெரிதாக மாறல... பார்லே-ஜி எப்படி இவ்வளவு லாபம் சம்பாதிக்குது தெரியுமா?
Recommended image2
VDA Hike: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111.! அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய சம்பளம்.! அதிரடியாக உயர்ந்த VDA!
Recommended image3
Home Loan 2026: எந்த வங்கியில் குறைந்த வட்டி? ரூ.30,000 சம்பாதிப்பவர்கள் எவ்வளவு கடன் பெறலாம்?
Related Stories
Recommended image1
PM Ujjwala Yojana Subsidy: அல்டிமேட் சந்தோஷ செய்தி.! கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
Farmer Subsidy: ரூ.58,000 மானியம் + அதிக வருமானம்.! விவசாயிகள் பெறுவது எப்படி ? யார் யாருக்கு கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved