MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • DMart-ல் தள்ளுபடி மழை: ₹99-க்கு இவ்வளவு பொருட்களா? கியூவில் நிற்கும் மக்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

DMart-ல் தள்ளுபடி மழை: ₹99-க்கு இவ்வளவு பொருட்களா? கியூவில் நிற்கும் மக்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

டிமார்ட்டில் ரூ.99 முதல் அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கோடை கால ஆடைகளுக்கு என்னென்ன தள்ளுபடி வழங்கப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : May 01 2026, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிமார்ட்டில் பணத்தை சேமிக்கலாம்
Image Credit : AI

டிமார்ட்டில் பணத்தை சேமிக்கலாம்

இந்தியாவில் அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. விலை உயர்வால் பரிதவிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது டிமார்ட் (D-Mart). இங்கு நீங்கள் வீட்டு உயயோக பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை வாங்கும்போது தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதால் பணத்தை நிறைய சேமிக்க முடியும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருப்பூர் என பல்வேறு இடங்களில் டிமார்ட் கிளைகள் அமைந்துள்ளன.

டிமார்ட் கிளைகளில் சிறப்பு விற்பனை

இப்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டிமார்ட் கிளைகளில் சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. டிமார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனையாக பல்வேறு பொருட்கள் ரூ.99 முதல் விறபனை செய்யப்பட்டு வருகின்றன. கோடை வெயிலைச் சமாளிக்கத் தேவையான வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஜூஸ் ஜாக்குகள் வெறும் ₹49 முதல் ₹149 வரையிலான விலையில் விற்பனையாகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரூ.99 முதல் பொருட்கள்
Image Credit : X

ரூ.99 முதல் பொருட்கள்

இந்த வாரச் சிறப்பு சலுகையாக சமையலறைக்குத் தேவையான ஸ்டீல் பாத்திரங்கள், டிபன் பாக்ஸ்கள், மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வெறும் ரூ.99 முதல் விற்கப்படுகின்றன. மேலும் ஒரு கிலோ சர்க்கரை, துணி துவைக்கும் பவுடர் மற்றும் சோப்பு வகைகளுக்கு Buy 1 Get 1 ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். டிமார்ட்டில் பெரும்பாலான மளிகை பொருட்கள் 6% முதல் 20% வரை குறைவான விலையில் கிடைக்கின்றன.

Related Articles

Related image1
80% வரை தள்ளுபடி.. டிமார்ட் பொங்கல் சேல் தொடக்கம்.. என்னவெல்லாம் வாங்கலாம்?
Related image2
டிமார்ட் ஷாப்பிங்கில் இதை மட்டும் பண்ணுங்க.. குறைந்த பணத்தில் அதிக பொருட்கள் வாங்கலாம்
34
அரிசி முதல் சோப்புகள் வரை...
Image Credit : Gemini

அரிசி முதல் சோப்புகள் வரை...

நீங்கள் மொத்தமாக 5 கிலோ மற்றும் 10 கிலோ அரிசி மூட்டைகள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை வாங்கினாலும் அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கும். டிமார்ட்டில் கோடைகால ஸ்பெஷலாக பருத்தி ஆடைகள் ரூ.199 முதல் விற்பனை செய்யப்படுகிறது. டிடர்ஜென்ட் & சோப்புகள் காம்போ ஆஃபரில் ரூ.20 முதல் கிடைக்கிறது. டம்ளர், தட்டுகள் என கிச்சனுக்கு தேவையான பொருட்கள் சுமார் 30% முதல் 40% வரையிலான தள்ளுபடியில் ரூ.99 விலையில் இருந்து விற்பனையாகின்றன. டிமார்ட்டில் பிஸ்கெட்டுகள் மற்றும் சிப்ஸ், மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (Buy 2 Get 1 Free) என்ற ஆபரில் கிடைக்கப் பெறுகிறது.

44
ஏசி, ஏர் கூலர் மின்சாதன பொருட்கள்
Image Credit : DMart

ஏசி, ஏர் கூலர் மின்சாதன பொருட்கள்

மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகிறன. இது மட்டுமின்றி ஏசி, ஏர் கூலர், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளுக்கு வாரண்டி உடன் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் சில கிளைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள டிமார்ட் கிளைகளில் 99 ரூபாயில் இருந்து தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படுவது உறுதியாகியுள்ளது. எனினும் ஒவ்வொரு கிளைகளிலும் அந்தந்த பொருட்களின் இருப்பை பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம்.

டிமார்ட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆஃபர்களைப் பொறுமையாகத் தேர்வு செய்ய வார நாட்களின் காலை நேரத்தில் செல்வது சிறந்தது என அனுபவமுள்ள வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஷாப்பிங்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dairy Farming: நல்லா பால் கறக்குற எருமையை வாங்குவது எப்படி? இந்த 5 டிப்ஸ் போதும் பாஸ்!
Recommended image2
Onion Price: தாறு மாறா குறையப்போகும் வெங்காயம் விலை! மூட்டை மூட்டையாய் வாங்கிச்செல்ல நேரம் வந்தாச்சு.! என்ன காரணம் தெரியுமா?
Recommended image3
Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?
Related Stories
Recommended image1
80% வரை தள்ளுபடி.. டிமார்ட் பொங்கல் சேல் தொடக்கம்.. என்னவெல்லாம் வாங்கலாம்?
Recommended image2
டிமார்ட் ஷாப்பிங்கில் இதை மட்டும் பண்ணுங்க.. குறைந்த பணத்தில் அதிக பொருட்கள் வாங்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved