பேமெண்ட் ஆப்ஸ் மூலம் கிரெடிட் கார்டு பில் கட்ட ஆர்பிஐ போட்ட புது ரூல்! இதுதான் ஒரே வழி!
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பெரிய வங்கிகளின் கிரெடிட் கார்டு பில் பேமெண்ட் தொடர்பாக புதிய கட்டுப்பாடு ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பெரிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வங்களின் கிரெடிட் கார்டுகளுக்கான பில்களைச் செலுத்துவதற்கு ஃபோன்பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற மொபைல் அப்ளிகேஷன்களை இனி பயன்படுத்த முடியாது.
அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்ட்களையும் பாரத் பில்-பே சிஸ்டம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஃபோன்பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற மொபைல் பேமெண்ட் செயலிகள் நேஷனல் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால் இந்த புதிய விதியை ஆர்பிஐ கொண்டுவந்துள்ளது.
இதனால், கிரெடிட் கார்டு பில் தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்கள் நெஃப்ட், ஐஎம்பிஎஸ் போன்ற பேமெண்ட் முறைகளில் பணத்தைச் செலுத்தலாம். அல்லது நேரடியாக வங்கிகளுக்குச் சென்று செலுத்தலாம்.
ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு காரணமாக ஃபோன்பே, அமேசான் பே, பேடிஎம் செயலிகளை வாடிக்கையாளர்கள் கைவிடுவார்கள் என்பதால், அந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.