MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Credit Card Fraud: எத்தனை மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் தெரியுமா?

Credit Card Fraud: எத்தனை மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் தெரியுமா?

கிரெடிட் கார்டு மோசடிகள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், மோசடி எப்படி நடைபெறுகிறது, அதற்கான சட்டப்பாதுகாப்புகள் என்ன,  எப்படி் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 19 2025, 07:27 AM IST| Updated : Jun 19 2025, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
கிரெடிட் கார்டுகள் மோசடிகளை தடுக்கலாம் ஈசியா!
Image Credit : Gemini

கிரெடிட் கார்டுகள் மோசடிகளை தடுக்கலாம் ஈசியா!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு பயன்பாடு நமது நிதி வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. ஆனாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதற்கேற்ப கிரெடிட் கார்டு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவ்வகை மோசடிகள் நமது நிதி பாதுகாப்பை மட்டுமின்றி நம்பிக்கையையும் குலைக்கும் அளவுக்கு ஆபத்தாக இருக்கின்றன எனவும் நடுத்தட்டு மக்கள் அதில் அதிக அளவில் சிக்கி தவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கிரெடிட் கார்டு மோசடிகள் எப்படி நடைபெறுகின்றன, அதற்கான சட்டப்பாதுகாப்புகள் என்ன, பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பன குறித்து தெளிவாக அறிந்து கொள்ளுவது அவசியம்.

29
மோசடி எப்படி நடைபெறுகிறது?
Image Credit : Gemini

மோசடி எப்படி நடைபெறுகிறது?

போலியான வங்கிக் களஞ்சியங்கள், மின்னஞ்சல்கள், அல்லது மெசேஜ்கள் மூலமாக உங்கள் கார்டு விவரங்களை திருடும் முறை தற்போது முதலிடத்தில் உள்ளது. ATM அல்லது PoS இயந்திரங்களில் கருவிகள் பொருத்தி உங்கள் கார்டு விவரங்களை பிரதி எடுத்து திருட்டில் ஈடுபடுகின்றனர். மேலும் SIM Swap Fraud: மோசடிக்காரர்கள் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி OTP போன்ற முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள், பின்னர் அதன்மூலம் தங்களது நோக்கத்தை நிறைவேற்றி கொள்கிறார்கள்.போலியான இணையதளங்கள் மூலம் உங்கள் கார்டு விவரங்களை திருடுகிறார்கள். உங்கள் கார்டை தொலைந்தாலோ அல்லது திருடப்படுமானால், அதைப் பயன்படுத்தி எந்தவொரு ஆட்களும் பரிவர்த்தனை செய்ய முடியும்.

Related Articles

Related image1
கிரெடிட் கார்டில் Minimum Due: எதிர்கொள்ளும் பிரச்சினைகள்!
Related image2
மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பில் மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம்! ஈசியா தொடங்கலாம்!
39
சட்ட பாதுகாப்பும் தண்டனையும்
Image Credit : Getty

சட்ட பாதுகாப்பும் தண்டனையும்

  • இந்தியாவில் கிரெடிட் கார்டு மோசடிகள் மீது கடுமையான சட்டங்கள் இருப்பதுடன், பல்வேறு சட்டப்பிரிவுகள் இவ்வகை குற்றங்களை நிர்வகிக்கின்றன:
  • தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), 2000:
  • பிரிவு 66C – அடையாள திருட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ₹1 லட்சம் அபராதம்.
  • பிரிவு 66D – போலி அடையாளம் கொண்டு மோசடி செய்தால் அதற்கும் 3 ஆண்டுகள் சிறை.
49
பாயும் சட்டங்கள்
Image Credit : our own

பாயும் சட்டங்கள்

இந்திய தண்டனைச் சட்டம் (IPC):

  • பிரிவு 468 – போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை.
  • பிரிவு 471 – போலியான ஆவணத்தை உண்மை எனக் காட்டி பயன்படுத்தினால் அதே அளவிலான தண்டனை.

கம்பனிகள் சட்டம் (Companies Act):

  • பிரிவு 447 – பெரிய நிதி மோசடிக்கு 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, கூடுதல் அபராதம்.
59
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : our own

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நபராக நீங்கள் கிரெடிட் கார்டு மோசடியின் பாதிப்புக்கு ஆளானால், உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் கார்டை உடனடியாக பிளாக் செய்யவும்.வங்கிக்கு அதிகாரப்பூர்வ புகார் அளிக்க வேண்டியது கட்டாயம்.72 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டியது கட்டாயம். அப்படி புகார் அளிக்கப்படும் பட்சத்தில் வங்கி 90 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். போலீசில் FIR பதிவு செய்தால் சட்டரீதியான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

69
நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்:
Image Credit : stockking@freepik

நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • உங்கள் PIN, CVV, OTP போன்றவற்றை யாருடனும் பகிரவேண்டாம்.
  • மின்னஞ்சல், மெசேஜ் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம்.
  • வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை மட்டும் பயன்படுத்தவும்.
  • உங்கள் மாதாந்திர ஸ்டேட்மெண்ட் சரிபார்க்கவும்.
  • வலியுறுத்தப்பட்ட பாதுகாப்பு செயலிகளை (Two-Factor Authentication) இயக்கவும்.
  • பொதுவான Wi-Fi மூலம் பரிவர்த்தனை செய்யவேண்டாம்.
79
மோசடி 986 சதவீதம் அதிகரிப்பு
Image Credit : iSTOCK

மோசடி 986 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிரெடிட் கார்டு மற்றும் இணைய மோசடிகள் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) கார்டு மற்றும் இணைய மோசடிகள் 6,699 வழக்குகளாக இருந்தன. ஆனால் அதற்குப் பிறகு 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) இது 4 மடங்கு அதிகரித்து 29,082 வழக்குகளாக உயர்ந்தது. இது மொத்தமாக 986% விகித அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பான மோசடி வழக்குகள், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கின்றபோதும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதைப் பிரதிபலிக்கின்றன.

89
மோசடி வழக்குகள் 50% சரிவு
Image Credit : Getty

மோசடி வழக்குகள் 50% சரிவு

2023-24 ஆண்டு முழுக்க மொத்தமாக 36,075 நிதி மோசடி வழக்குகள் பதிவாக, அதில் 80% வரை கிரெடிட் கார்டு மற்றும் இணையம் சார்ந்த மோசடிகளே இடம்பெற்றன. 2024-25 நிதியாண்டின் முதல் பாதி (ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை) மட்டும் பார்த்தால், 12,069 கார்டு மற்றும் இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. எனினும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முன்பதிவுகள் காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் மோசடி வழக்குகள் 50% குறைவடைந்துள்ளதாக RBI தரவுகள் கூறுகின்றன

99
இந்திய குடிமகன் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : X

இந்திய குடிமகன் என்ன செய்ய வேண்டும்?

எத்தணை மணிநேரத்தில் புகார் அளிக்க வேண்டும்

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. ஒருவர் தனது கிரெடிட் கார்டில் சந்தேகமான பரிவர்த்தனை கண்டால், உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு கார்டை பிளாக் செய்ய வேண்டும். 72 மணி நேரத்துக்குள் புகார் அளிக்கப்படுமாயின், நுகர்வோருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், வங்கிகள் இந்த விவகாரங்களை 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும்.

இப்படி செய்யாதீங்கப்பா!

பொதுமக்கள் PIN, CVV, OTP போன்ற நுண்ணிய தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது எனவும் மாதந்தோறும் கார்டு பரிவர்த்தனை அறிக்கையை சரிபார்க்க வேண்டும் எனவும் வங்கிகள் அறிவுறுத்துகின்றன. வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் பொதுவான Wi-Fi இணையதளங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.முடிவாக, கிரெடிட் கார்டு மோசடிகள் இந்தியாவில் நாளுக்குநாள் உயரும் நிலையில், நுகர்வோர் விழிப்புணர்வும், வங்கிகளின் பாதுகாப்பு அடிப்படைகளும் ஒருசேர இணைந்து செயல்பட்டாலே இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். 

இதுதான் நல்லது!

கிரெடிட் கார்டு மோசடிகள் ஒரு சாதாரண குற்றமாக இல்லாமல், பயனாளர்களை நிதியாகவும் மனதிலுமாகவும் பாதிக்கும் அபாயகரமான குற்றமாக மாறியுள்ளது. அதற்கெதிராக சட்டங்கள் இருந்தாலும், விழிப்புணர்வும் தன்னாட்சி நடவடிக்கைகளும் தான் நம் பாதுகாப்பின் முதல்படிகள். சட்ட அறிவும், நிதிநயமும், பாதுகாப்பு நடைமுறைகளும் இணைந்தாலே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கடன் அட்டை
குற்றம்
வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியா
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved