MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் டிக்கெட் Confirm ஆகுறது Luck அல்ல! Smart Trick தான்! ஒரு நிமிடத்தில் Confirm Ticket! எப்படி தெரியுமா?!

ரயில் டிக்கெட் Confirm ஆகுறது Luck அல்ல! Smart Trick தான்! ஒரு நிமிடத்தில் Confirm Ticket! எப்படி தெரியுமா?!

தட்கல் டிக்கெட் புக் செய்வதில் சிரமமா? இந்த எளிய வழிகளைப் பயன்படுத்தி, விரைவாகவும் எளிதாகவும் ரயில் டிக்கெட் புக் செய்து பயணத்தை இனிமையாக்குங்கள்! மாஸ்டர் லிஸ்ட், ஆதார் இணைப்பு, சரியான நேரம் போன்ற குறிப்புகள் உதவும்.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 19 2025, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இனி டிக்கெட் கிடைக்கும் ஈசியா!
Image Credit : social media

இனி டிக்கெட் கிடைக்கும் ஈசியா!

இந்தியாவில் ரயில் பயணம் எல்லோருக்கும் பிடித்தமானது.நாம் திடீர் பயணங்களுக்கு ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது எவ்வளவு முயற்சி செய்தாலும் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறதா?. சில விஷயங்களை செய்தால் போது நாம் உடனே எளிய முறையில் விரைவாக டிக்கெட் புங்கிங் செய்ய முடியும்.ரயிலில் குடும்பத்துடன் சந்தோஷமாக பயணிக்க வேண்டுமா அப்ப டிக்கெட் புங்கிங் செய்ய கீழ் கண்ட டிரிக்ஸ் உங்களுக்கு கை கொடுக்கும்.

26
மாஸ்டர் லிஸ்ட்: நேரத்தை மிச்சப்படுத்தும் வழி
Image Credit : Asianet News

மாஸ்டர் லிஸ்ட்: நேரத்தை மிச்சப்படுத்தும் வழி

தட்கல் முன்பதிவு செய்யும்போது, பயணிகள் பெயர், வயது, பெர்த் விருப்பம் போன்றவற்றை உள்ளிட நேரம் ஆகும். இதனால் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் போக வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க: My Account > My Profile > Add/Modify Master List செல்லவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், பெர்த் விருப்பம், ஐ.டி விவரங்களை உள்ளீடு செய்யவும்.புக் செய்யும்போது, மாஸ்டர் லிஸ்ட்டில் இருந்து பயணிகளைத் தேர்ந்தெடுத்து விரைவாக முன்பதிவு செய்யலாம்.

Related Articles

Related image1
ரயில் பயணிகளுக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்.. இனி கவலைப்பட தேவையில்லை!
Related image2
இனி சொகுசா ரயில் பெட்டியில் கம்மியான கட்டணத்திலேயே தங்கலாம்.! ரயில்வே துறை சூப்பர் திட்டம்- எங்கே தெரியுமா.?
36
விரைவாக டிக்கெட் புக் செய்வது எப்படி?
Image Credit : Google

விரைவாக டிக்கெட் புக் செய்வது எப்படி?

தட்கல் முன்பதிவு நேரத்தில் பலர் ஒரே நேரத்தில் முயற்சிப்பதால், வேகமாக செயல்பட வேண்டும்.ஐ.ஆர்.சி.டி.சி செயலி அல்லது இணையதளத்தில் முன்பே உள்நுழைந்து வைத்திருக்கவும். ஆதார் இணைப்பு முடிந்திருப்பதை உறுதி செய்யவும்.நல்ல இணைய இணைப்பு பயன்படுத்தவும். வைஃபை அல்லது 4G/5G இணையம் பயன்படுத்துவது நல்லது.மாஸ்டர் லிஸ்ட்டில் பயணிகள் விவரங்களை முன்பே உள்ளிட்டு வைத்தால், புக் செய்யும் நேரத்தில் ஒரே கிளிக்கில் பயணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.UPI, கார்டு அல்லது நெட் பேங்கிங் விவரங்களை முன்பே தயார் வைத்திருக்கவும். பேமெண்ட் பக்கத்தில் தாமதமாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

இதையும் செய்யலாம்

ஒரு ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், அதே பாதையில் உள்ள மற்ற ரயில்களை முயற்சிக்கவும். பெண்களுக்கு தனி ஒதுக்கீடு உண்டு அதனை பயன்படுத்தினால் ஈசியாக டிக்கெட் கிடைக்கும்.Train > Book ticket > Quota > Ladies என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது தனியாக செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

46
நேரம் முக்கியம் பாஸ்
Image Credit : our own

நேரம் முக்கியம் பாஸ்

சரியான நேரம்: ஏ.சி வகுப்புக்கு 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்புக்கு 11 மணிக்கும் சரியாக முன்பதிவு தொடங்கவும். ஒரு நிமிட தாமதம் கூட வெயிட்டிங் லிஸ்டுக்கு இட்டுச் செல்லலாம்.

பிரீமியம் தட்கல் & இன்ஷூரன்ஸ்

அவசரமாக டிக்கெட் தேவைப்பட்டால், ‘பிரீமியம் தட்கல்’ ஆப்ஷனை பயன்படுத்தவும். இதில் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகம், ஆனால் கட்டணம் சற்று கூடுதல்.மறக்காமல் இன்ஷூரன்ஸ் ஆப்ஷனை டிக் செய்யவும்! இது குறைந்த செலவில் (பைசாக்களில்) ரூ.10 லட்சம் வரை காப்பீடு தரும்.

56
ஆட்டோ அப்கிரேடேஷன் & ரயில் ஒன் செயலி
Image Credit : Google

ஆட்டோ அப்கிரேடேஷன் & ரயில் ஒன் செயலி

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டா? Auto Upgradation ஆப்ஷனை டிக் செய்யவும். ரயிலில் இடம் இருந்தால், கூடுதல் கட்டணம் இல்லாமல் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கும்.

‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவு, உணவு ஆர்டர் என அனைத்தையும் ஒரே இடத்தில் செய்யலாம். இதை உங்கள் மொபைலில் வைத்திருங்கள்!

டிக்கெட் ரத்து: கட்டணங்கள்

புக்கிங் செய்த டிக்கெட்டடை 48 மணி நேரத்துக்கு முன் ரத்து செய்தால் ஏ.சி முதல் வகுப்புக்கு - ரூ.240, ஸ்லீப்பர் கிளாசுக்கு - ரூ.120, இரண்டாம் வகுப்புக்கு - ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.12 மணி நேரத்துக்கு முன் ரத்து செய்தால் 25% கட்டணம் கழிக்கப்படும்.4 மணி நேரத்துக்கு முன் ரத்து செய்தால் 50% கட்டணம் கழிக்கப்படும். தட்கல் கன்ஃபார்ம் டிக்கெட்டுக்கு ரீஃபண்ட் இல்லை. வெயிட்டிங் டிக்கெட்டுக்கு விதிமுறைகளின்படி ரீஃபண்ட் கிடைக்கும். இந்த எளிய வழிகளைப் பயன்படுத்தி, விரைவாகவும் எளிதாகவும் ரயில் டிக்கெட் புக் செய்து பயணத்தை இனிமையாக்குங்கள்!

66
தட்கல் டிக்கெட் எப்போது புக் செய்யலாம்?
Image Credit : our own

தட்கல் டிக்கெட் எப்போது புக் செய்யலாம்?

நாளை பயணிக்க வேண்டுமா? இன்று தட்கல் டிக்கெட் புக் செய்யலாம்!

ஏ.சி வகுப்பு டிக்கெட்டுகள்: காலை 10 மணிக்கு தொடங்கும்.

ஸ்லீப்பர் வகுப்பு: காலை 11 மணிக்கு தொடங்கும்.

ஆதாரை இணைப்பது எப்படி?

  • உங்கள் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது இப்போது கட்டாயம்.
  • ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலியில் உள்நுழையவும்.
  • My Account > Authenticate User > Aadhar number, PAN number பகுதிக்குச் செல்லவும்.
  • ஆதார் எண்ணை உள்ளிட்டு, Save கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைலுக்கு வரும் OTP-யை உள்ளிட்டு Submit செய்யவும்.
  • இப்படி ஆதார் இணைத்தால், ஒரு மாதத்தில் 12 தட்கல் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தொடர்வண்டி பயணச்சீட்டு
ரயில் டிக்கெட் முன்பதிவு
தொடர்வண்டி விதிகள்
வணிகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved