அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக்! 6 மாதங்களுக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்வு!
LPG Cylinder Price: பல மாதங்களாக குறைந்து வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை, அக்டோபர் மாதத்தில் ரூ.16 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சமையல் எரிவாயு சிலிண்டர்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு அதிர்ச்சி
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஜூன் ரூ.24 , ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஆகஸ்ட் ரூ.33.50, செப்டம்பர் ரூ.51.50 மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து குறைந்து வந்தது. எனவே இந்த மாதமும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 6 மாதங்களுக்கு பிறகு விலை உயர்ந்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை
இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,754க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.16 உயர்ந்து ரூ.1,754ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிப்பவது குறிப்பிடத்தக்கது.