MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

Indias First Bullet Train Update: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 26 2026, 06:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய ரயில்வேயின் புரட்சி
Image Credit : AI

இந்திய ரயில்வேயின் புரட்சி

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நமது நாட்டில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி, வந்தே பாரத் என அதிவேக ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன. இதில் மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், பயண நேரம் குறைவதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இப்போது, அடுத்தகட்டமாக புல்லட் ரயில் சகாப்தத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
Image Credit : Gemini AI

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்

நாட்டின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலை உருவாக்கும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன. பெங்களூருவில் உள்ள BEML நிறுவனத்தின் 'ஆதித்யா பிளான்ட்'-இல், இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலான B-28-ஐ உருவாக்கும் பணிகள் தொடங்கின. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த ஆலையைத் திறந்து வைத்தார். இது இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

இந்த புல்லட் ரயிலின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை BEML நிறுவனம் 2024 அக்டோபரில் பெற்றது. இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இரண்டு அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.866 கோடி ஆகும். முதல் புல்லட் ரயில் 2027 மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் தொடங்கும்.

Related Articles

Related image1
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
Related image2
ரயில் வெயிட்டிங் லிஸ்ட்.. GNWL vs PQWL vs RLWL.. எதில் சீட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்? முழு விவரம்!
34
சென்னை டூ திருச்சி 2 மணி நேரம் தான்
Image Credit : Getty

சென்னை டூ திருச்சி 2 மணி நேரம் தான்

2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கும் வாய்ப்புள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் புல்லட் ரயில் பயணம் சாத்தியமாகும். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்த ரயிலை முதலில் சூரத் மற்றும் வாபி இடையே சுமார் 97 கி.மீ தூரத்திற்கு இயக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த தடத்தில் அதிவேக ரயில் சேவையை சோதித்த பிறகு, மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. மணிக்கு 228 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து திருச்சி இடையிலான 332 கிமீ தூரத்தை வெறும் 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

44
புல்லட் ரயிலில் என்னென்ன வசதிகள்?
Image Credit : Gemini

புல்லட் ரயிலில் என்னென்ன வசதிகள்?

இந்த புல்லட் ரயிலில் முழுவதுமாக ஏசி செய்யப்பட்ட சேர் கார் கோச்கள் இருக்கும். இருக்கைகள் 360 டிகிரி சுழலும் வகையிலும், முன்னும் பின்னும் சாயும் வகையிலும் வடிவமைக்கப்படும். பயணிகளின் பொழுதுபோக்குக்காக 'ஆன்-போர்டு இன்ஃபோடெயின்மென்ட்' சிஸ்டமும் இதில் இடம்பெறும். இதன் மூலம், அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பான் போன்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டிப் போக்குவரத்து
தொடர்வண்டி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Seats: ரயில்களில் சீட்கள் எப்போதுமே நீல நிறத்தில் இருக்க காரணம்? இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்!
Recommended image2
EPFO Pension Hike: பிஎஃப் கணக்குதாரர்களுக்கு ஜாக்பாட்.. குறைந்தபட்ச பென்சன் ₹3000 ஆக உயர்கிறதா?
Recommended image3
உஷார்..! எஸ்பிஐ வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்
Related Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் வெயிட்டிங் லிஸ்ட்.. GNWL vs PQWL vs RLWL.. எதில் சீட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved