45 பைசாவில் ரூ.10 லட்சம் கவரேஜ்! இதைவிட சீப்பான இன்சூரன்ஸ் கிடைக்காது!
IRCTC Cheapest insurance: நாட்டிலேயே மலிவான காப்பீட்டுத் திட்டம் எது என்று தெரியுமா? வெறும் 45 பைசாவில் ரூ.10 லட்சம் கவரேஜ் கொடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
IRCTC Cheapest insurance
இன்றைய உலகில், காப்பீட்டின் தேவையும் முக்கியத்துவமும் கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுவாக, ஆயுள் காப்பீட்டிற்காக மக்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்த வேண்டும். இன்று, நாட்டிலேயே மலிவான காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
IRCTC insurance
இந்திய ரயில்வேயின் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) மிகவும் மலிவு விலையில் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. இது ரயில் பயணிகளுக்கு வெறும் 45 பைசாவிற்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்தக் காப்பீட்டைப் பற்றி முழு விவரத்தைப் அறிந்துகொள்ளலாம்.
IRCTC
ஐஆர்சிடிசி காப்பீட்டுக்கு தகுதியானவர் யார்?
ஐஆர்சிடிசியின் கூற்றுப்படி, ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், உறுதி செய்யப்பட்ட, RAC மற்றும் பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
Cheapest insurance policy
பெர்த்/ இருக்கை இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணக் காப்பீடு பொருந்தாது. இருப்பினும், 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பெர்த்துடன் அல்லது பெர்த் இல்லாமல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் குழந்தைகளுக்கு இந்தக் காப்பீடு கிடைக்கும்.
Railway insurance
ரயில் பயணத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து, பயணிக்கு காயம் ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் இந்த காப்பீட்டின் கீழ் கவர் செய்யப்படுகிறது. ஆனால், இறப்பு, நிரந்தர ஊனம், பகுதி ஊனம் ஆகியவற்றுக்கு உரிய கவரேஜ் மாறுபடும்.
Rs 10 lakh insurance policy
ஐஆர்சிடிசி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரயில் விபத்தில் மரணம் ஏற்பட்டாலும் நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் ரூ.10 லட்சம் நிவாரணம் கிடைக்கும். பகுதி அளவு ஊனமும் ஏற்பட்டால் ரூ.7.5 லட்சம் கிடைக்கும். காயம் ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுக்காக ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். இறந்த உடலை எடுத்துச் செல்ல ரூ.10,000 கிடைக்கும். பாலிசிதாரருக்கும் பாலிசி நிறுவனத்திற்கும் இடையே கிளைம்/பொறுப்பு இருக்கும்.
45 paise insurance
இந்த காப்பீட்டை எடுப்பது முற்றிலும் பயணிகளின் விருப்பதைப் பொறுத்தது. ஆனால் வெறும் 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் கவரேஜ் கிடைப்பதால் இந்தக் காப்பீடடை எடுப்பது பயணப் பாதுகாப்பை உறுதிசெய்யும். நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலும் நீண்டதூர பயணங்களுக்காகவே ரயிலில் செல்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, விபத்துக்கள் அல்லது எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்படட்டால் IRCTC வழங்கும் இந்த வசதி கைகொடுக்கும்.