ஒரு நாளைக்கு இதான் லிமிட்.. பேங்கில் பணம் போடுவதற்கு முன்பு.. விதிகளை நோட் பண்ணுங்க
அரசு மற்றும் வருமான வரித்துறை கருப்புப் பணத்தைத் தடுக்க ரொக்கப் பரிவர்த்தனைகளை தீவிரமாகக் கண்காணிக்கின்றன. இந்த விதியை மீறினால், பெறப்பட்ட தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும்.

பணம் டெபாசிட் லிமிட்
இன்றைய டிஜிட்டல் காலத்தில் அரசு மற்றும் வருமான வரித்துறை ரொக்க பரிவர்த்தனைகளை கடுமையாக கண்காணித்து வருகிறது. இதன் நோக்கம் கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தடுக்கச் செய்வது. பெரும்பாலானோர் அறியாமல் பெரிய அளவில் ரொக்கப் பரிவர்த்தனைகள் செய்வதுண்டு. ஆனால், இவை சட்டப்படி தவறாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, ரொக்க வரம்பு குறித்த விதிகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
வருமான வரி சட்டம்
வருமான வரி சட்டம் பிரிவு 269ST படி, ஒரே நாளில் ஒரு நபரிடமிருந்து ரூ.2 லட்சத்தைத் தாண்டி ரொக்கமாக பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதுவே பரிசு, கடன், வணிகம் அல்லது வேறு எந்த காரணத்திற்காக இருந்தாலும் விதிமுறை மீறல் என கருதப்படும். உதாரணமாக, ஒருவர் ரூ.3 லட்சம் ரொக்கமாக பெற்றால், அந்தத் தொகை வரித்துறையால் கைப்பற்றப்படலாம், மேலும் காரணம் கூறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அபராதம் எவ்வளவு?
ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்தைத் தாண்டி வங்கியில் ரொக்கமாக வைப்பு செய்தல், ரூ.1 லட்சத்தை மீறி கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து வாங்குதல் அல்லது விற்பனை, ரூ.50,000-ஐ மீறும் ரொக்க பரிசு பெறுதல் போன்றவை அனைத்தும் வரித்துறை கண்காணிப்பில் உள்ளன. மேலும், வணிகம் மேற்கொள்ளும் நபர்கள் ரூ.2 லட்சத்தை மீறி ரொக்கமாக பணம் பெற்றாலும் அந்த விதிமுறை மீறல் ஆகும். பிரிவு 269ST-ஐ மீறினால், பெற்ற ரொக்கத் தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும்.
வங்கி பரிவர்த்தனைகள்
உதாரணமாக, ரூ.2.5 லட்சம் ரொக்கமாக பெற்றால், அதே அளவு ரூ.2.5 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். இது ஊழியர், வணிகர், தொழில்முனைவர் என அனைவருக்கும் பொருந்தும். பெரிய பரிவர்த்தனைகள் அனைத்தையும் வங்கி அல்லது டிஜிட்டல் வழியே மேற்கொள்ளுங்கள். அனைத்து செலவுகளுக்கும் ரசீது அல்லது பதிவு வைத்திருங்கள். பரிசு அல்லது கடனுக்கான பரிமாற்றம் எழுதப்பட்ட ஆவணமாக இருக்கட்டும். அவசியமான நேரங்களில் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அரசு டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகரும் நிலையில், வங்கி பரிவர்த்தனைகள் உங்கள் பணத்தையும் வரியையும் பாதுகாக்கும்.