MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • No Loan for Car or House : வங்கி லோன் இல்லாமல் வீடு, கார் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

No Loan for Car or House : வங்கி லோன் இல்லாமல் வீடு, கார் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

No Loan for Car or House : கார் அல்லது வீடு வாங்க வேண்டும் என்றால் லோன் அவசியம் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. கடன் சுமையின்றி சொத்து உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 02 2026, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
லோன் இல்லா வீடு
Image Credit : Pinterest

லோன் இல்லா வீடு

கார் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த கனவுடன் சேர்ந்து வரும் முதல் கேள்வி பெரும்பாலும் லோன் பற்றிதான். இஎம்ஐ கட்டும் வாழ்க்கை பலருக்கு நிதி அழுத்தமாக மாறும் நிலையில், “லோன் இல்லாமல் வாங்க முடியாதா?” என்ற கேள்வி இன்று அதிகம் கேட்கப்படுகிறது. நிதி நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், சரியான திட்டமிடலுடன் அது சாத்தியமே.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முதலீட்டு திட்டம்
Image Credit : PR

முதலீட்டு திட்டம்

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு இந்த பாதையில் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையை முதலீடு செய்வதன் மூலம், நீண்ட பெரிய நிதி உருவாக்கலாம். இந்த சேமிப்பு பின்னர் கார் அல்லது வீடு வாங்கும் நிதியாக மாறலாம். இதன் பலன், கடன் சுமை மற்றும் நீண்டகால இஎம்ஐ பொறுப்பிலிருந்து விலகுவது.

Related Articles

Related image1
SIP Investment: மாசம் ₹2,000 முதலீடு... 4 வருஷத்துல லட்சாதிபதி ஆகலாம்! கணக்கு இதுதான்!
Related image2
ரூ.2 லட்சம் முதலீடு... ரூ.90 ஆயிரத்திற்கும் மேல் வட்டி வருமானம்..! அசத்தும் தபால் சேமிப்பு திட்டம்
35
எஸ்ஐபி முதலீடு
Image Credit : Google

எஸ்ஐபி முதலீடு

உதாரணமாக, மாதம் ரூ.20,000 எஸ்ஐபி முதலீடு செய்து, சராசரியாக 12 சதவீத வருமானம் கிடைத்தால், 10 ஆண்டுகளில் சுமார் ரூ.45 லட்சம் வரை நிதி உருவாகலாம். இதில் முதலீட்டு தொகையும் சந்தை வளர்ச்சியால் கிடைக்கும் வருமானமும் அடங்கும். இந்த தொகை ஒரு தரமான கார் வாங்குவதற்கு போதுமானதாக இருக்கலாம்.

45
வீடு வாங்கும் இலக்கு வைத்திருப்பவர்கள்
Image Credit : Gemini AI

வீடு வாங்கும் இலக்கு வைத்திருப்பவர்கள்

வீடு வாங்கும் இலக்கு வைத்திருப்பவர்கள் இன்னும் நீண்டகால பார்வையுடன் திட்டமிட வேண்டும். மாதம் ரூ.30,000 எஸ்ஐபி செய்து 10 ஆண்டுகள் தொடர்ந்தால், சுமார் ரூ.67 லட்சம் வரை நிதி உருவாக வாய்ப்பு உள்ளது. இலக்கை 15 ஆண்டுகளாக நீட்டித்தால், இந்த தொகை ஒரு கோடியைத் தாண்டும் நிலைக்கும் செல்லக்கூடும். இருப்பினும், வீட்டு விலைகள் காலப்போக்கில் உயரக்கூடும் என்பதால், இலக்கும் முதலீட்டிற்கும் ஏற்ப திருத்தப்பட வேண்டும்.

55
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்
Image Credit : Axis bank

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச்சந்தையுடன் இணைந்தவை என்பதால், குறுகியகால ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்பதை மறக்கக்கூடாது. அதனால் புதிய முதலீட்டாளர்கள் மல்டி-அசெட் அல்லது சமநிலையான அணுகுமுறைகளை தேர்வு செய்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. நிதி கனவுகள் வேகத்தில் அல்ல, ஒழுக்கமான திட்டமிடலில் தான் உருவாகின்றன என்பதையே இந்த எஸ்ஐபி பாதை நினைவூட்டுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கடன்
தனிநபர் நிதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
700 Rupee Note: இனி ரூ.500க்கு பதில் 700 ரூபாய் நோட்டா? வைரலாகும் போட்டோ! RBI சொன்னது என்ன?
Recommended image2
Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
SIP Investment: மாசம் ₹2,000 முதலீடு... 4 வருஷத்துல லட்சாதிபதி ஆகலாம்! கணக்கு இதுதான்!
Related Stories
Recommended image1
SIP Investment: மாசம் ₹2,000 முதலீடு... 4 வருஷத்துல லட்சாதிபதி ஆகலாம்! கணக்கு இதுதான்!
Recommended image2
ரூ.2 லட்சம் முதலீடு... ரூ.90 ஆயிரத்திற்கும் மேல் வட்டி வருமானம்..! அசத்தும் தபால் சேமிப்பு திட்டம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved