MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பிஸ்னெஸ் சீக்ரெட்.! வெள்ளி வாங்குனா எப்போ, எப்படி வரி கட்டனும் தெரியுமா?!

பிஸ்னெஸ் சீக்ரெட்.! வெள்ளி வாங்குனா எப்போ, எப்படி வரி கட்டனும் தெரியுமா?!

வெள்ளி முதலீடுகளான ஆபரணம், ETF, மற்றும் ஃபண்டுகளுக்கு விதிக்கப்படும் வருமான வரி பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. முதலீட்டை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து, குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி எவ்வாறு மாறுபடுகிறது என்பதை இது விவரிக்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 20 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெள்ளிக்கும் வரி விதிப்பு
Image Credit : Pinterest

வெள்ளிக்கும் வரி விதிப்பு

வெள்ளி (Silver) முதலீடு என்பது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆபரணம், வெள்ளி நாணயம், கட்டி, சில்வர் ETF, சில்வர் சேவிங்ஸ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் போன்ற பல வடிவங்களில் முதலீடு செய்யும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், இந்த முதலீடுகளில் கிடைக்கும் லாபத்துக்கு எப்படி வருமான வரி விதிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெளிவாக தெரியாது. வெள்ளி முதலீடுகள் பொதுவாக “பங்குச் சந்தை சாரா சொத்து” (Non-Equity Asset) எனக் கருதப்படுகின்றன. அதனால், முதலீட்டு வகை மற்றும் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து வரி விதிப்பு மாறுபடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிசிக்கல் வெள்ளிக்கு எப்படி வரி?
Image Credit : Pinterest

பிசிக்கல் வெள்ளிக்கு எப்படி வரி?

வெள்ளி ஆபரணம், நாணயம் அல்லது வெள்ளிக் கட்டி போன்ற Physical Silver-ஐ வாங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் விற்றால் கிடைக்கும் லாபம், உங்கள் வருமான வரி ஸ்லாப் அடிப்படையில் சேர்க்கப்படும். அதாவது, உங்கள் ஆண்டு வருமானம் எந்த வரி வரம்பில் இருக்கிறதோ அதற்கேற்ப வரி கட்ட வேண்டி வரும். அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து விற்றால், அதற்கு Long Term Capital Gain (LTCG) வரி பொருந்தும். இந்த லாபத்துக்கு தற்போது 12.5% வரி விதிக்கப்படுகிறது.

Related Articles

Related image1
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Related image2
Business: மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வீட்டில் இருந்தே செய்தாலும் கொட்டும் லாபம்.! என்ன தொழில் தெரியுமா?
35
சில்வர் ETF-க்கு வேறு விதி
Image Credit : instagram

சில்வர் ETF-க்கு வேறு விதி

சில்வர் ETF (Exchange Traded Fund) முதலீடுகளுக்கான வரி விதிப்பில் தனி விதிமுறைகள் உள்ளன. ETF யூனிட்டுகளை வாங்கி ஓராண்டுக்குள் விற்றால், Short Term Capital Gain (STCG) வரியாக 20% செலுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு மேல் வைத்திருந்து விற்றால், அது Long Term Capital Gain ஆகக் கருதப்படும். அப்போது லாபத்துக்கு 12.5% வரி விதிக்கப்படும்.

45
சில்வர் சேவிங்ஸ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்
Image Credit : instagram

சில்வர் சேவிங்ஸ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்

Silver Savings Fund of Fund திட்டங்களில் கிடைக்கும் வருமானம், Physical Silver முதலீட்டைப் போலவே கருதப்படுகிறது. அதாவது, இரண்டு ஆண்டுகளுக்குள் விற்றால் உங்கள் வருமான வரி ஸ்லாப் படி வரி விதிக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் 12.5% LTCG வரி செலுத்த வேண்டும்.

55
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
Image Credit : instagram

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது

வெள்ளி முதலீடு செய்யும்போது லாபம் மட்டும் அல்லாமல், வரி விதிப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக குறுகிய காலத்தில் விற்பனை செய்யும் முதலீடுகளில் அதிக வரி சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்டகால முதலீடு செய்தால் வரிச்சலுகை கிடைக்கும் என்பதால், திட்டமிட்டு முதலீடு செய்வது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Real Estate: வீட்டு மனை வாங்குறது ரொம்ப ஈசி.! ரூ. 1லட்சம் பணத்துல உங்க லட்சியம் நிறைவேறும் உடனே.! எப்படி தெரியுமா?
Recommended image2
Business: இட்லி விற்றே மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் தெரியுமா? தெரிஞ்ச தொழில் தெரியாத ரகசியம்.!
Recommended image3
Petrol Diesel Update: பைக், கார் வச்சிருக்கீங்களா? ஜூலை 1 முதல் ஹேப்பி நியூஸ்! மத்திய அரசு அப்டேட்!
Related Stories
Recommended image1
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Recommended image2
Business: மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வீட்டில் இருந்தே செய்தாலும் கொட்டும் லாபம்.! என்ன தொழில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved