- Home
- Business
- மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அப்டேட்.. பட்ஜெட்டில் கிடைத்த சிக்னல்.. என்ன தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அப்டேட்.. பட்ஜெட்டில் கிடைத்த சிக்னல்.. என்ன தெரியுமா?
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் 2026 பட்ஜெட்டில் 8-வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வரும் என பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.

8-வது ஊதியக்குழு அப்டேட்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் 2026 பட்ஜெட்டில் 8-வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வரும் என பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் இது குறித்து நேரடியாக எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. இதனால், “இந்த ஆண்டே 8வது ஊதியக்குழு அமலுக்கு வருமா?” என்ற சந்தேகம் ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
பட்ஜெட் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள செலவின விவரங்களை கவனித்தால், இந்த சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது. 2026–27 நிதியாண்டிற்கான நிறுவல் செலவு (ஸ்தாபன செலவு) ரூ.8.24 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.41,000 கோடி மட்டுமே அதிகம். பொதுவாக, ஊதிய அமலாக்கத்திற்கு இதைவிட பலமடங்கு கூடுதல் செலவுக்குழு தேவைப்படும். இந்த உயர்வு, புதிய நியமனங்கள் மற்றும் டிஏ (Dearness Allowance) உயர்வுக்கே போதுமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சம்பள ஊதியக்குழு தாமதம்
2026 தொடங்கியுள்ள நிலையில், சுமார் 1.19 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஃபிட்மெண்ட் ஃபேக்டர் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. ஆனால், உடனடி சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.
பட்ஜெட் 2026 விளக்கம்
உண்மையில், 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என அரசு 2025 ஜனவரி 15 அன்று அறிவித்தது. ஆனால் அதன் பின் செயல்முறை மெதுவாக நகர்ந்தது. அதன்பிறகு, 2025 அக்டோபர் 28 அன்று மட்டுமே இதற்கான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சம்பளம்
இந்த கணக்குப்படி பார்த்தால், 8-வது ஊதியக்குழுவின் அறிக்கை 2027 ஜூலைக்கு பிறகே கிடைக்கும். அதன் பின்னர் அரசு முடிவெடுத்து செயல்படுத்தவும் கூடுதல் காலம் தேவை. அதனால், சம்பள உயர்வின் நிஜமான பயன் 2027 நடுப்பகுதி அல்லது 2028 தொடக்கத்தில்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையைப் பார்க்க, 2026 பட்ஜெட்டில் பெரிய செலவின உயர்வு இல்லாதது, 8-வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு 2027 பட்ஜெட்டில் வரக்கூடும் என்பதற்கான சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

