MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 2026-ல் இதெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை

2026-ல் இதெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை

பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்களுக்கு அரசியல் பதற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி போன்றவையும் காரணமாக அமையலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 10 2026, 11:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாபா வாங்கா கணிப்பு
Image Credit : Gemini AI

பாபா வாங்கா கணிப்பு

பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா 2026-ஐச் சுற்றி மீண்டும் பேசப்படுவது அதிகரித்துள்ளது. அவர் கூறியதாக பரவி வரும் தகவல், உலகம் பெரிய பொருளாதார அதிர்வை சந்திக்கலாம் என்பதே முக்கிய கருத்து. வேலைவாய்ப்புகள் குறையலாம், பணத்தின் மதிப்பு அழுத்தத்திற்கு உள்ளாகலாம், வங்கி அமைப்புகளில் நம்பிக்கை தளரலாம் என்பதும் இதில் இடம் பெறுகிறது. குறிப்பாக, காகித நாணயம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குழப்பங்கள் உருவாகலாம் என்ற கணிப்பே மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது.

24
2026 பொருளாதார நெருக்கடி
Image Credit : Asianet News

2026 பொருளாதார நெருக்கடி

இந்த சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை கண்டுபிடிக்க முயல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களுக்கு தேவை உயரும் எனவும் பேசப்படுகிறது. குறிப்பாக செம்பின் தேவை அதிகரித்து, அதை “புதிய தங்கம்” என பார்க்கும் நிலையும் உருவாகலாம் என்ற கருத்து வைரலாகி வருகிறது. உலக அரசியல் பதற்றங்கள், நாடுகளுக்கிடையேயான போட்டிகள் போன்றவை பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பலரும் விவாதிக்கின்றனர்.

Related Articles

Related image1
தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
Related image2
வெள்ளி மோதிரம் அணிந்தால் பண நஷ்டம் ஏற்படுமா? இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமாக இருங்கள்!
34
உலக பொருளாதாரம்
Image Credit : Google

உலக பொருளாதாரம்

மேலும், காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் போன்ற காரணங்களால் சப்ளை சேன் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம். அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி வேலைவாய்ப்புகளில் மாற்றங்களை உருவாக்கி, சில துறைகளில் வேலை இழப்பை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் பேசப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து உலக பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

44
பாபா வாங்கா
Image Credit : AI Generated

பாபா வாங்கா

1911-ல் பிறந்து 1996-ல் மறைந்த பாபா வாங்கா, பார்வையற்றவராக இருந்தாலும் பல கணிப்புகளால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவரது கருத்துக்கள் பல ஆண்டுகளாக விவாதத்திற்குரியவையாக இருந்து வருகின்றன. 1960களில் பல்கேரியாவில் உள்ள பல்கேரியன் அகாடமி ஆஃப் சயின்சஸ் உடன் தொடர்புடைய ஆய்வு அமைப்பில் அவர் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இன்று வரை, அவர் கூறியதாக பரவும் கணிப்புகள் உண்மையா அல்லது ஊகங்களா என்பது விவாதமாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அவை மீண்டும் பேசப்படுவது மட்டும் உறுதியாகத் தொடர்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாபா வங்கா
பாபா வங்கா கணிப்புகள்
தங்கம்
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி சிலிண்டர் தேவையில்லை.. கேஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த 4 லட்சம் இந்தியர்கள்.. என்ன நடந்தது?
Recommended image2
Gold Loan: ஒரு கிராம் தங்கத்துக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் தெரியுமா?! அம்மாடியோ.! கணக்க கேட்டா துள்ளி குதிப்பீங்க.!
Recommended image3
ஒரே அறிவிப்பு.. ஒட்டுமொத்த தங்க விலையை மாற்றிய ட்ரம்ப்.. அதிர்ச்சியில் இந்தியர்கள்
Related Stories
Recommended image1
தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
Recommended image2
வெள்ளி மோதிரம் அணிந்தால் பண நஷ்டம் ஏற்படுமா? இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமாக இருங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved