- Home
- Business
- Axis Credit Card: ஆக்சிஸ் கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஷாக் நியூஸ்! ஆகஸ்ட் 28 முதல் புது ரூல்ஸ்!
Axis Credit Card: ஆக்சிஸ் கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஷாக் நியூஸ்! ஆகஸ்ட் 28 முதல் புது ரூல்ஸ்!
Axis Credit Card: ஆக்சிஸ் பேங்க் தன்னுடைய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. வங்கி தனது கிரெடிட் கார்டுகளின் விதிகள் மற்றும் கட்டணங்களில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஆக்சிஸ் கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஷாக் நியூஸ்
லேட் பேமெண்ட்டுக்கு அதிக கட்டணம்
சரியான நேரத்துக்கு கிரெடிட் கார்டு பில் கட்டத் தவறினால், விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தை வங்கி மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக, ரூ.50,000-க்கு மேல் பாக்கி வைத்திருந்தால், பெரிய அபராதம் கட்ட வேண்டியிருக்கும். வெவ்வேறு பாக்கித் தொகைகளுக்கான புதிய கட்டணங்கள் இதோ:
ரூ.500 வரை: தாமதக் கட்டணம் இல்லை • ரூ.501 முதல் ரூ.5,000 வரை: ரூ.500 கட்டணம் • ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை: ரூ.750 கட்டணம் • ரூ.10,001 முதல் ரூ.50,000 வரை: ரூ.1,200 கட்டணம் • ரூ.50,000-க்கு மேல் பாக்கி இருந்தால்: ரூ.1,300 தாமதக் கட்டணம்
பணம் செலுத்தும் முறையில் மாற்றம்
நீங்க பில் தொகையை முழுதாகச் செலுத்தாமல், ஒரு பகுதியை மட்டும் செலுத்தினால், அந்தப் பணத்தை வரவு வைக்கும் முறையை வங்கி மாற்றியுள்ளது. இனி, நீங்கள் செலுத்தும் பணம் முதலில் வரிகள் மற்றும் இதர கட்டணங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதன்பிறகு EMI, வட்டி, பின்னர் உங்கள் பர்ச்சேஸ், கடைசியாகத்தான் கேஷ் அட்வான்ஸ் தொகைக்கு வரவு வைக்கப்படும்.
டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் (DCC) கட்டணம் உயர்வு
சர்வதேச பரிவர்த்தனைகள் அல்லது வெளிநாட்டு வெப்சைட்களில் இந்திய ரூபாயில் பணம் செலுத்தும்போது விதிக்கப்படும் டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் மார்க்கப் கட்டணத்தை 1.5%-லிருந்து 3.5% ஆக வங்கி உயர்த்தியுள்ளது. (ஆனால், மேக்னஸ் கார்டுகளுக்கு இது 2% மட்டுமே). இதனால், வெளிநாடு செல்பவர்களுக்கும், வெளிநாட்டு தளங்களில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துபவர்களுக்கும் செலவு அதிகரிக்கும்.
ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் விதிகள்
உள்நாட்டு ஏர்போர்ட் லவுஞ்ச்களில் மேக்னஸ் கிரெடிட் கார்டின் 'பிரையாரிட்டி பாஸ்' இனி செல்லாது. உள்நாட்டு லவுஞ்சுக்குள் நுழைய, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டையும் போர்டிங் பாஸையும் காட்ட வேண்டும். இமிக்ரேஷனுக்குப் பிறகு இந்திய சர்வதேச டெர்மினல்களில் உள்ள ஏர்போர்ட் லவுஞ்ச்கள், சர்வதேச லவுஞ்ச்களாகவே கருதப்படும். அங்கே பிரையாரிட்டி பாஸ் பயன்படுத்தி நுழையலாம்.
கிஃப்ட் கார்டு, டோல் கட்டணங்களுக்கு ரிவார்ட்ஸ் இல்லை
இனிமேல் கிஃப்ட் கார்டு வாங்கினால், அதற்கு எந்த ரிவார்டு பாயின்ட்ஸோ அல்லது கேஷ்பேக்கோ கிடைக்காது. இதை 'வாலெட்' செலவுகள் பிரிவிலிருந்து மாற்றி, 'கிஃப்ட் கார்ட்ஸ்' என்ற தனிப் பிரிவில் வங்கி சேர்க்க உள்ளது. அதேபோல, டோல் கட்டணங்கள், சாலை வரிகள் மற்றும் பாலம் கட்டணங்களுக்கும் இனி ரிவார்டு பாயின்ட்ஸ் கிடையாது.
ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த புதிய மாற்றங்களை மனதில் வைத்து, மாதாந்திர பில்களை சரியான நேரத்தில் கட்டுவது நல்லது. தாமதக் கட்டணம் மற்றும் சர்வதேச பரிவர்த்தனை கட்டண உயர்விலிருந்து தப்பிக்க இப்போதே கவனமாக இருங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

