MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Credit Card Charges: கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? ATM-ல் பணம் எடுத்தால் இவ்வளவு கட்டணமா?

Credit Card Charges: கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? ATM-ல் பணம் எடுத்தால் இவ்வளவு கட்டணமா?

Credit Card Charges:: இப்போது கிரெடிட் கார்டு தேவை அதிகரித்து விட்டது. அவசர தேவைக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கலாம். ஆனால் வங்கிகள் இதற்கு வட்டி மேல் வட்டி போடுகின்றன. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 29 2026, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிரெடிட் கார்டில் எவ்வளவு பணம் எடுக்கலாம்?
Image Credit : twitter

கிரெடிட் கார்டில் எவ்வளவு பணம் எடுக்கலாம்?

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் பணம் எடுப்பதற்கான ஒரு லிமிட் (Cash Limit) இருக்கும். இது உங்களுடைய மொத்த கிரெடிட் லிமிட்டில் சுமார் 20% வரை இருக்கலாம். உதாரணமாக, உங்கள் கார்டின் லிமிட் ₹1 லட்சம் என்றால், நீங்கள் ₹20,000 வரை பணம் எடுக்க முடியும். மீதமுள்ள தொகையை ஷாப்பிங் செய்ய பயன்படுத்தலாம். இந்த லிமிட் ஒவ்வொரு வங்கிக்கும் மாறும்.

பணம் எடுத்தால் உடனடியாக விதிக்கப்படும் கட்டணங்கள்

கிரெடிட் கார்டில் பணம் எடுத்தால் இரண்டு விதமான கட்டணங்கள் உண்டு. ஒன்று, 'கேஷ் அட்வான்ஸ் ஃபீ' (Cash Advance Fee). மற்றொன்று, எடுத்த பணத்திற்கான வட்டி. இந்த கட்டணங்கள் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. பொதுவாக, எடுத்த தொகையில் 2% முதல் 2.5% வரை அல்லது குறைந்தபட்சம் ₹300/₹500 கட்டணம் வசூலிப்பார்கள். இதில் எது அதிகமோ அதுவே உங்கள் கட்டணம். மேலும், பணம் எடுத்த முதல் நாளிலிருந்தே வட்டி கணக்கிடப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எந்த வங்கி எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது?
Image Credit : Gemini AI

எந்த வங்கி எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது?

ஒவ்வொரு வங்கியும் கிரெடிட் கார்டில் பணம் எடுப்பதற்கு வெவ்வேறு கட்டணங்களையும், வட்டி விகிதங்களையும் வசூலிக்கின்றன.

1. ஆக்சிஸ் வங்கி (Axis Bank): எடுத்த பணத்தில் 2.5% அல்லது குறைந்தபட்சம் ₹500 கட்டணம். மாத வட்டி 1.50% முதல் 3.60% வரை.

2. பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda): 2.5% அல்லது ₹500 கட்டணம். வட்டி விகிதம் 1.50% முதல் 3.49% வரை.

3. இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank): 2.5% அல்லது ₹300 (இதில் எது அதிகமோ அது). மாத வட்டி 1.79% முதல் 3.95% வரை.

4. ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank): 2.5% அல்லது குறைந்தபட்சம் ₹500 கட்டணம். வட்டி 1.99% முதல் 3.60% வரை.

5. ஹெச்எஸ்பிசி வங்கி (HSBC Bank): 2.5% அல்லது ₹500 கட்டணம். மாத வட்டி 1.99% முதல் 3.49% வரை.

6. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி (Standard Chartered Bank): எடுத்த தொகையில் 2% அல்லது ₹300 (இதில் எது அதிகமோ அது). வட்டி விகிதம் 1.99% முதல் 3.75% வரை.

7. ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank): 2.5% அல்லது குறைந்தபட்சம் ₹500 கட்டணம். வட்டி 2.49% முதல் 3.67% வரை.

8. கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): ஒவ்வொரு ₹10,000 எடுக்கும்போதும் ₹300 கட்டணம். வட்டி விகிதம் 2.49% முதல் 3.50% வரை.

9. யெஸ் வங்கி (Yes Bank): 2.5% அல்லது குறைந்தபட்சம் ₹300 கட்டணம். மாத வட்டி 2.49% முதல் 3.50% வரை.

10. எஸ்பிஐ கார்டு (SBI Card): 2.5% அல்லது ₹500 (இதில் எது அதிகமோ அது). வட்டி விகிதம் 2.75% முதல் 3.50% வரை.

Related Articles

Related image1
Credit Card Users Alert: கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எச்சரிக்கை.! ஜூன் 15 முதல் மாறும் விதிகள்.!
Related image2
ஜூன் 1 முதல் உங்க கிரெடிட் கார்டு மற்றும் UPI-ல் இந்த மாற்றம் வரப்போகுது! உங்களுக்கு லாபமா? நஷ்டமா?
34
கூட்டு வட்டி எப்படி சுமையை அதிகரிக்கிறது?
Image Credit : Asianet News

கூட்டு வட்டி எப்படி சுமையை அதிகரிக்கிறது?

கிரெடிட் கார்டில் பணம் எடுத்தால், தினசரி கூட்டு வட்டி (Daily Compounding Interest) முறையில் வட்டி கணக்கிடப்படும். அதாவது, நீங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்த தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து மொத்தக் கடன் சுமை வேகமாக அதிகரிக்கும். அதனால், சிறிய தொகையாக இருந்தாலும், அது பெரிய நிதிச் சுமையாக மாற வாய்ப்புள்ளது.

44
அவசரத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது
Image Credit : Asianet News

அவசரத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது

கிரெடிட் கார்டில் பணம் எடுப்பதை அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். அடிக்கடி இந்த வசதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பணம் எடுத்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவது நல்லது. இது உங்கள் வட்டிச் சுமையைக் குறைப்பதோடு, கிரெடிட் ஸ்கோரையும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கடன் அட்டை
வங்கி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
July Bank Holidays: ஜூலையில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த நாட்கள்? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Gold Price Forecast: 10 கிராமுக்கு ரூ.36,000 சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Recommended image3
Gold ETF: தங்கம் வாங்காமலேயே தங்கம் வாங்குவது எப்படி? இது லாபமான முதலீடா?
Related Stories
Recommended image1
Credit Card Users Alert: கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எச்சரிக்கை.! ஜூன் 15 முதல் மாறும் விதிகள்.!
Recommended image2
ஜூன் 1 முதல் உங்க கிரெடிட் கார்டு மற்றும் UPI-ல் இந்த மாற்றம் வரப்போகுது! உங்களுக்கு லாபமா? நஷ்டமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved