- Home
- Business
- Gold Rate Today : நகை பிரியர்கள் ஷாக்கிங் நியூஸ்.. புதிய உச்சத்தில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today : நகை பிரியர்கள் ஷாக்கிங் நியூஸ்.. புதிய உச்சத்தில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் உயர்ந்து வந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,920க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,615க்கு விற்பனையானது.
இன்றைய (ஏப்ரல் 25) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5.630ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,090ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,720ஆக விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.