ரூ.55க்கு சொளையா ₹3000 பென்ஷன் கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்!
மாதம் ரூ.3000 பென்ஷன். மத்திய மோடி அரசாங்கம் புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.55 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்கும் முறை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

ரூ.55க்கு சொளையா ₹3000 பென்ஷன் கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்!
மாதம் ரூ.3000 கிடைக்கும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நிதி உதவி இல்லாதவர்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.
மத்திய அரசு திட்டம்
பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மான்-தன் யோஜனா (PM-SYM) மாதம் ரூ.3000 பென்ஷன் வழங்கும் அரசு திட்டம் இதுவாகும். 2019ல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மாதம் ரூ.3000 பென்ஷன் வழங்குகிறது.
பென்ஷன் திட்டம்
பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மான்-தன் யோஜனாவில் சேர்ந்தால், மாதம் ரூ.55 செலுத்த வேண்டும். 60 வயதில், மாதம் ரூ.3000 (ஆண்டுக்கு ரூ.36,000) பென்ஷன் பெறலாம். இத்திட்டம் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதி சுதந்திரம் பெற உதவுகிறது. தம்பதிகள் இருவரும் தனித்தனியாக சேர்ந்து ஆண்டுக்கு ரூ.72,000 பென்ஷன் பெறலாம்.
பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மான்-தன் யோஜனா
வயது வரம்பு: 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.15,000க்குள் இருக்க வேண்டும். EPFO/ESIC உறுப்பினராக இருந்தால் தகுதியற்றவர். விண்ணப்பிக்க, ஈ-ஷ்ராம் கார்டு (தொழிலாளர் அட்டை) தேவை. இது இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை ஆனது வலைத்தளம்: maandhan.in/shramyogi. ‘Click here to apply now’ என்பதைக் கிளிக் செய்யவும். ‘Self Enrollment’ என்பதைக் கிளிக் செய்யவும். மொபைல் எண்ணை உள்ளிட்டு Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
மத்திய அரசின் பென்ஷன் திட்டம்
பெயர், மின்னஞ்சல் முகவரி, கேப்ட்சா குறியீடு போன்ற விவரங்களை நிரப்பி Generate OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP-ஐ உள்ளிட்டு Verify என்பதைக் கிளிக் செய்யவும். தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை நிரப்பவும். இறுதியாக, எதிர்காலக் குறிப்புக்காக விண்ணப்பத்தின் பிரதியை எடுத்து வைக்கவும்.
ரூ.200 நோட்டுகள் உங்களிடம் இருக்கா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு