சிறு வியாபாரிகளுக்கு உடனடியாக ரூ.50,000 கடன்! ஆதார் கார்டு போதும்!
மத்திய அரசின் PM SVANidhi என்ற திட்டத்தின் கீழ் சிறு வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

சிறு வியாபாரிகளுக்கு உடனடியாக ரூ.50,000 கடன்! ஆதார் கார்டு போதும்! மத்திய அரசு திட்டம்!
மத்திய அரசு பெண்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. பெண்களுக்கு, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அப்போது தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்கிடும் வகையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் PM SVANidhi
என்ற திட்டத்தை தொடங்கியது.
சிறு வியாபாரிகளுக்கு உடனடி கடன்
இது வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ கிரெடிட் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி சாலையோர வியாரிகள், சிறு கடை உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.30,000 வழங்கப்படும். ஆனால் இந்த 30,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படாது. முதல் தவணையாக ரூ. 10,000 வழங்கப்படும். அதை கட்டி முடித்தவுடன் இரண்டாம் தவணையாக ரூ. 20,000 வழங்கப்படும். அதை கட்டி முடித்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.50,000 வரை வியாபாரிகள் கடன் வாங்க முடியும்.
வெறும் ரூ.250 போதும்! எஸ்பிஐயின் புதிய SIP திட்டம் அறிமுகம்! எப்படி முதலீடு செய்வது?
மத்திய அரசு திட்டம்
இப்படி தவணை தவணையாக கடன் வழங்குவது மூலம் வியாபாரிகள் தாங்கள் வாங்கிய கடனை எளிதில் திருப்பி செலுத்த முடியும். மேலும் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் பொறுப்பும் அதிகரிக்கிறது. கடனை சரியான நேரத்தில் திருப்பிச் வியாபாரிகள் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.1,200 மானியமும் பெறலாம். PM SVANidhi திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்துடன் UPI-இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஆதார் கார்டு இருந்தால் கடன்
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24க்கு முன்னதாக நகர்ப்புறங்களில் செயல்பட்டு வந்த தெருவோர வியாபாரிகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் PM SVANidhi திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற முடியும். இந்த கடனை வங்கிகள் வழங்குகின்றன. தகுதிவாய்ந்த வியாபாரிகள் அல்லது பயனாளிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பிற அடையாள அட்டையை சம்பத்தப்பட்ட வங்கிகளில் சமர்பித்து கடன்களை வாங்கிக் கொள்ளலாம்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) முக்கிய கட்டுப்பாடு! அரசு ஊழியர்களுக்கு செக்!