8வது சம்பளக் குழு: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்பு!
8வது சம்பளக் குழுவை அமைப்பது இரண்டு மாதங்களில், ஒருவேளை ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெறலாம். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். 2026-27 நிதியாண்டில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும்.

8வது ஊதியக் குழு
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது சம்பளக் குழுவை உருவாக்குவது குறித்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றன. 8-வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அது அமைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலவினச் செயலாளர் மனோஜ் கோவில், 8வது சம்பளக் குழுவை உருவாக்குவது விளைவுகள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். 8வது சம்பளக் குழுவை அமைப்பது இரண்டு மாதங்களில், ஒருவேளை ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெறலாம் என்று அவர் கூறினார். வரைவு குறிப்பு விதிமுறைகள் பாதுகாப்பு, உள்துறை மற்றும் DoPT அமைச்சகங்களுக்கு அவர்களின் கருத்துகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்ட பிறகு TOR வடிவமைக்கப்படும், பின்னர் அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்றும் அவர் கூறினார்.
எப்போது முதல் சம்பளம் உயரும்?
முக்கிய ஊதிய உயர்வை அமல்படுத்துவதன் அடிப்படையில் 8வது சம்பளக் குழுவின் பொருளாதார விளைவுகள் குறித்து கேட்டபோது அவர் நேரத்தை தெளிவுபடுத்தினார். வரவிருக்கும் நிதியாண்டான 2025–2026 இல் சம்பளக் குழு எந்த நிதி விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
ஊதியக்குழு அமைக்கப்பட்ட பிறகு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சிறிது காலம் எடுக்கும், பின்னர் அரசாங்கம் அதை செயல்படுத்த வேண்டியிருக்கும். எனவே, வரவிருக்கும் நிதியாண்டில் ஊதியம் எதிர்பார்க்கப்படுவதில்லை. ஏப்ரல் 2026 இல் தொடங்கும் நிதியாண்டில் ஊதியம் உயர்வு இருக்கும் என்று மனோஜ் கோவில் தெரிவித்தார்..
விரைவில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜனவரி 16, 2025 அன்று, 8வது ஊதியக்குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது. கிட்டத்தட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1947 முதல், ஏழு ஊதியக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 7வது ஊதியக்குழு 2016 இல் அமலுக்கு வந்தது. அதன் பதவிக்காலம் 2026 இல் முடிவடையும்.
இந்த செயல்முறை மாநில அரசுகள், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் பரந்த ஆலோசனைகளை உள்ளடக்கும். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்பு ஆணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
8வது சம்பள கமிஷன் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
8-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதிய அமைப்பு, பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி (DA) சரிசெய்தல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய சலுகைகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நிதி தாக்கம்: 2025-26 நிதியாண்டில் பெரிய நிதி தாக்கம் எதுவும் காணப்படாது என்றும், 2026-27 நிதியாண்டில் தேவையான பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
எத்தனை ஊழியர்கள் பயனடைவார்கள்?
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்
சம்பள உயர்வு எதிர்பார்ப்புகள்:
இன்னும் அதிகாரப்பூர்வ சதவீதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடிப்படை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து என்ன?
அமைச்சரவையின் ஒப்புதல்
சம்பள ஆணையக் குழுவை அமைத்தல்
பங்குதாரர்களுடன் (DoPT, பாதுகாப்பு அமைச்சகம், முதலியன) ஆலோசனை
சம்பளம் மற்றும் பணவீக்கத் தரவுகளைச் சேகரித்தல்
இறுதி பரிந்துரைகள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் (நிதியாண்டு 2026-27)
8வது ஊதியக் குழு ஏப்ரல் 2025 இல் பணியைத் தொடங்கும். 1.15 கோடி பயனாளிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 2026-27 நிதியாண்டில் பட்ஜெட் ஒதுக்கீடு. சம்பள உயர்வு எத்தனை சதவீதம் உயரும் என்பது விரைவில் தெரியவரும்.