- Home
- Business
- 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! சம்பளம் மட்டுமில்ல.. HRA-வும் 2 மடங்கு உயருமா?
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! சம்பளம் மட்டுமில்ல.. HRA-வும் 2 மடங்கு உயருமா?
8th Pay Commission: 8வது சம்பள கமிஷன் வீட்டு வாடகைப்படியான (HRA) விஷயத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் அடிப்படை சம்பளம் உயர்ந்தால், HRA இரண்டு மடங்கு வரை உயர வாய்ப்புள்ளது.

8th Pay Commission
HRA எவ்வளவு?
HRA, அடிப்படை சம்பளத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. 8வது சம்பள கமிஷனில் 2.0, 2.28, மற்றும் 2.57 போன்ற பல ஃபிட்மென்ட் ஃபாக்டர்கள் பரிசீலனையில் உள்ளன. உதாரணமாக, லெவல்-1 ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ₹18,000.
ஃபிட்மென்ட் ஃபாக்டர்
ஒருவேளை 2.0 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் ₹36,000 ஆக உயரும். அப்போது வீட்டு வாடகைப்படியும் ₹5,400-லிருந்து ₹10,800 ஆக உயரும். இதேபோல், 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டால், அடிப்படை சம்பளம் ₹18,000-லிருந்து ₹46,260 ஆக மாறும்.
HRA ₹13,880 வரை உயரும்
இந்த கணக்கீட்டின்படி, அவர்களின் HRA ₹13,880 வரை உயரும். இதேபோல், X-பிரிவு நகரங்களில் உள்ள லெவல்-10 ஊழியர்களுக்கு, HRA மாதத்திற்கு ₹43,250 வரை கிடைக்கலாம். தற்போது மத்திய அரசு ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் நகரத்தைப் பொறுத்து மூன்று விதமான HRA பெறுகிறார்கள்.
எந்தெந்த நகரங்களுக்கு எவ்வளவு HRA?
X-பிரிவு நகரங்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 30%, Y-பிரிவு நகரங்களுக்கு 20%, Z-பிரிவு நகரங்களுக்கு 10% என HRA வழங்கப்படுகிறது. ஆனால், டெல்லி-என்சிஆர், மும்பை போன்ற பெருநகரங்களில் வீட்டு வாடகை மிக வேகமாக அதிகரித்து வருவதால், இந்த விகிதங்கள் போதாது என அகில இந்திய என்பிஎஸ் ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகள் வாதிடுகின்றன.
HRA உயர்த்த அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
X-பிரிவு நகரங்களுக்கு 36%, Y-பிரிவு நகரங்களுக்கு 24%, Z-பிரிவு நகரங்களுக்கு 12% என HRA-வை உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. சில சங்கங்கள் X-பிரிவு நகரங்களுக்கு இதை 40% வரை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
அமலாக்கக் காலம்
வழக்கமாக மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சம்பள கமிஷனை அமல்படுத்தும். அந்த வகையில் 8வது சம்பள கமிஷன் 2026, ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தற்போது 2026 ஜூலை மாதத்தை எட்டியுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அரசாணை (Notification) எப்போது வெளியாகும், எப்போது முதல் இது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. நிலுவைத் தொகையுடன் (Arrears) இது கணக்கிடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கிராஜுவிட்டி மற்றும் இதர பலன்கள் உயர்வு
அடிப்படை சம்பளம் உயரும் போது, அது வெறும் மாதச் சம்பளத்தை மட்டுமல்லாமல் ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களையும் பெருமளவில் உயர்த்தும். குறிப்பாக, கிராஜுவிட்டி (Gratuity) எனப்படும் பணிக்கொடை உச்சவரம்பு (சமீபத்தில் இது ₹20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டது) புதிய கமிஷனில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பயணப்படி (TA) மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற இதர சலுகைகளும் ஊழியர்களின் தரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

