அரசு ஊழியர்களின் சம்பளம் கணக்கிடும் விதியில் மாற்றம்! இனி 34% அதிக ஊதியம் கிடைக்கும்!!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியத் தொகையாக நிர்ணயிக்கப்படும். அதாவது லெவல் 1 ஊழியர்களுக்கு தோராயமாக ரூ.20,736 ஓய்வூதியம் கிடைக்கும்.
மத்திய அரசு சமீபத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அமல்படுத்தியது, இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் 7வது ஊதியக்குழு அறிமுகம் செய்யப்பட்டது. 2026ஆம் ஆண்டில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். எனவே அதற்ரிய தயாரிப்பை மத்திய அரசு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
7வது ஊதியக் குழு 2014 பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. 8வது ஊதியக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்படும். எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகளை வழங்க சுமார் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பதால், புதிய ஊதியக்குழு அமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
லெவல் 1 ஊழியர்களுக்கு 34% வரையும், லெவல் 18 ஊழியர்களுக்கு 100% வரையும் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 பணியாளர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சம் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
6வது ஊதியக்குழுவில் இருந்து 7வது ஊதியக்குழுவுக்கு மாறிய பிறகு, ஃபிட்மென்ட் காரணியை (fitment factor) 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் கோரியுள்ளது. ஆனால், 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணியை 2.57 ஆக உயர்த்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஃபிட்மென்ட் காரணி (fitment factor) மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆல் பெருக்கினால், மாதச் சம்பளம் ரூ.18,000ல் இருந்து 44% அதிகரித்து ரூ. 26,000 ஆக உயரும்.
கடந்த சில மாதங்களில், 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து பல ஊழியர் அமைப்புகள், மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியுள்ளன.
அண்மையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், "2026ஆம் ஆண்டில்தான் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இருந்தாலும் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு சிந்தித்து வருகிறது" என்று தெரிவித்தார்.