MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 8வது ஊதியக் குழு கிடையாதா? புதிய முறையைக் கொண்டுவரும் மத்திய அரசு!

8வது ஊதியக் குழு கிடையாதா? புதிய முறையைக் கொண்டுவரும் மத்திய அரசு!

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக, ஊதியக் குழு முறையை மாற்றி புதிய வழிமுறையைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : SG Balan
| Updated : Jan 15 2025, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
8th Pay Commission

8th Pay Commission

மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைக்காமல், ஊதியக் குழு முறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Eighth Pay Commission

Eighth Pay Commission

மத்திய அரசு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஜனவரி 2016 முதல் அமல்படுத்தியது. 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவிற்கு முன், 4வது, 5வது மற்றும் 6வது ஊதியக் குழுக்கள் தலா 10 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டிருந்தன. இதனால்தான் 8வது ஊதியக் குழுவை அமைக்கக் கோரி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

38
8th Pay Commission formation

8th Pay Commission formation

எப்படி இருந்தாலும், ஊதியக் குழுவின் காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில், இப்போது மத்திய அரசு ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக புதிய அணுகுமுறையை ஆராய்கிறது என்ற செய்தி அரசு ஊழியர்களிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

48
Central government employees

Central government employees

"முன்பு போல் புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேறு வழியை அரசாங்கம் யோசித்து வருகிறது" என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்புகளில் இதுபற்றிப் பேசப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

58
National Council Joint Consultative Machinery (NC JCM)

National Council Joint Consultative Machinery (NC JCM)

8வது ஊதியக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசின் நிலைப்பாட்டை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்திடம் இல்லை என்றும், எனவே 7வது ஊதியக் குழுவின் காலக்கெடு குறித்த கேள்வி எழவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

68
NC JCM on CPC recommendations

NC JCM on CPC recommendations

அடுத்த ஊதியக் குழுவை அமைக்கும் திட்டத்தை அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், புத்தாண்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

78
NC JCM letter

NC JCM letter

NC JCM 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்துகிறது
8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை என்று நிதி அமைச்சகம் கடந்த மாதம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, NC JCM மத்திய அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதி, “உடனடியாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியது.

88
Pay Commission system

Pay Commission system

டிசம்பர் 3 தேதியிட்ட கடிதத்தில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது என்றும், அடுத்த ஊதியம் மற்றும் ஓய்வூதியத் திருத்தம் ஜனவரி 1, 2026 முதல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
மோடி அரசு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved