மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.! 8வது சம்பள கமிஷன் அப்டேட்!
மத்திய அரசு 8வது ஊதியக் கமிஷனை விரைவில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படைச் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8வது சம்பள கமிஷன்
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பெரிய சந்தோஷச் செய்தி வந்துள்ளது. மோடி அரசு, 8வது ஊதியக் கமிஷனை விரைவில் அமைக்கப் போவதாக உறுதியளித்துள்ளது. இதன் மூலம், பணியாளர்களின் அடிப்படை சம்பளம், அலவன்ஸ், ஓய்வூதியம் ஆகியவை உயர வாய்ப்பு உள்ளது. புதிய கமிஷன் அமைக்கப்பட்டவுடன் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என அரசு குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
புதிய பரிந்துரைகளில், அன்பளிப்பு கொடுப்பனவு (DA) அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். கமிஷன் நேரத்தில் அமைக்கப்பட்டால், அதன் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு அதிகம். தற்போது மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பென்ஷன் உயர்வு
இதுகுறித்து கடந்த மாதம், அரசு ஊழியர் தேசிய கூட்டமைப்பு (GENC) பிரதிநிதிகள், மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்கை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், 8வது ஊதியக் கமிஷன் தாமதம், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS)* ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீட்பு, மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீட்பு, மற்றும் நடைமுறை காலத்தில் நிறுத்தப்பட்டது 18 மாத DA நிலுவை தொகை வழங்குதல் போன்றவை அடங்கும்.
அடிப்படை சம்பள உயர்வு
ஊதிய உயர்வு எவ்வளவு என்பது Fitment Factor என்பதிலேயே உள்ளது. 7வது ஊதியக் கமிஷனில் இது 2.57 ஆக இருந்தது. 8வது கமிஷனில் இது 1.92 முதல் 2.86 வரை இருக்கும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். இதன் அடிப்படையில் அடிப்படை சம்பள உயர்வு, HRA, TA, NPS, CGHS போன்ற அனைத்திலும் அதிகரிப்பு ஏற்படும்.
மத்திய அரசு பணியாளர்கள்
அதாவது, Grade Pay 1900, 2400, 4600, 7600, 8900 எனும் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு உயர்வு கிடைக்கும் என்பதை கணக்கிட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தத்தில், 8வது ஊதியக் கமிஷன் அமல்படுத்தப்பட்டவுடன், மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.