3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு வந்த நல்ல செய்தி..
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அலவன்ஸ் 3% உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும். ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission DA Hike
மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் இந்த முறை அகவிலைப்படி மற்றும் அலவன்ஸ்-ஐ 3% உயர்த்த முடியும். அதே நேரத்தில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும். ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50% அதிகரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு 50% ஐ எட்டிய நிலையில், கடந்த சில மாதங்களில் பல கொடுப்பனவுகள் அதாவது அலவன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளன.
7th Pay Commission
இதில் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) அடங்கும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் அதிகரிப்பை அரசாங்கம் அறிவிக்கும். ஆனால் இந்த உயர்வு ஜனவரி மற்றும் ஜூலை முதல் பொருந்தும் என்று கருதப்படுகிறது. அகவிலைப்படி உயர்வுக்கான அடிப்படையானது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) ஆகும்.
DA Hike
2001 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டைக் கொண்டு நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி முன்னதாக அகவிலைப்படி கணக்கிடப்பட்டது. இருப்பினும், 2016 ஆம் ஆண்டின் புதிய அடிப்படை ஆண்டைக் கொண்ட புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டை அரசாங்கம் அகவிலைப்படி கணக்கிடுவதற்குப் பயன்படுத்தத் தொடங்கியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு DA% = [(AICPIயின் கடந்த 12 மாதங்களின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 115.76)/115.76] x 100 ஆகும்.
Dearness Allowance
பொதுத்துறை ஊழியர்களுக்கு DA% = [(AICPIயின் கடந்த 3 மாதங்களின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100 ஆகும். CPI-IW டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை 2.6 புள்ளிகளால் 138.8ல் இருந்து 141.4 ஆக அதிகரித்துள்ளது. இதனால், டிஏ அதிகரிப்பு சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18,000 அடிப்படை சம்பளம் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் திருத்தத்திற்குப் பிறகு 3% டிஏ உயர்வு அவர்களின் மொத்த சம்பளம் ரூ.540 ஆக உயரும்.
Government Employees
இது அவர்களின் ஆண்டு சம்பளம் ரூ.6,480 அதிகரிக்கும். 56,900 அடிப்படை சம்பளம் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ திருத்தத்திற்குப் பிறகு, மாதச் சம்பளம் ரூ.1,707 ஆகவும், ஆண்டுக்கு ரூ.20,484 ஆகவும் உயரும். இதன் மூலம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம் உயரும். இருப்பினும், இந்த டிஏ மற்றும் டிஆர் திருத்தம் குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இடைவிடாமல் 150 கிமீ வரை சிறந்த ரேஞ்ச்.. வெளியாகும் பஜாஜ் பிளேட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?