MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் பயணத்தில் கிடைக்கும் 5 இலவச வசதிகள்.. மறக்காம நோட் பண்ணுங்க மக்களே.!

ரயில் பயணத்தில் கிடைக்கும் 5 இலவச வசதிகள்.. மறக்காம நோட் பண்ணுங்க மக்களே.!

ரயில் டிக்கெட் வாங்கினால் வெறும் பயணம் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? உண்மையில், அதற்கு பின்னால் பலருக்கும் தெரியாத இலவச சலுகைகள் ஒளிந்திருக்கின்றன. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 28 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரயில் பயணத்தில் இலவச வசதிகள்
Image Credit : our own

ரயில் பயணத்தில் இலவச வசதிகள்

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கானோர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கிறார்கள். குறைந்த செலவில், நீண்ட தூரத்தை சௌகரியமாக கடக்க முடிவதால் ரயில் என்பது பொதுமக்களின் முதன்மை தேர்வாக உள்ளது. ஆனால், ஒரு டிக்கெட் வாங்கிய பிறகு பயணிகளுக்கு கிடைக்கும் சில இலவச வசதிகள் பற்றி பலருக்கும் தெரியாது. இந்திய ரயில்வே வழங்கும் இந்த சலுகைகள், உங்கள் பயணத்தை இன்னும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகின்றன.

26
வெயிட்டிங் ரூம்
Image Credit : our own

வெயிட்டிங் ரூம்

ரயில் நிலையங்களில் கிடைக்கும் முக்கியமான வசதி ‘வெயிட்டிங் ரூம்’. ரயில் தாமதமாக இருந்தாலோ அல்லது நீங்கள் முன்கூட்டியே நிலையத்துக்கு வந்திருந்தாலோ, இங்கு சும்மா உட்கார்ந்து ஓய்வெடுக்கலாம். பல முக்கிய நிலையங்களில் ஈசி மற்றும் நோன்-ஏசி வசதியுடன் வெயிட்டிங் ஹால்கள் உள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமானது.

Related Articles

Related image1
இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026: LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
Related image2
ஐஸ்கிரீம், சாக்லேட் விலை 20% வரை அதிரடி உயர்வு.! பின்னணி காரணம் கேள்விப்பட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
36
இலவச வைஃபை
Image Credit : our own

இலவச வைஃபை

இன்றைய காலத்தில் இணையம் அத்தியாவசியமாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டு, பல ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாமல் ரயில் ஸ்டேட்டஸ் பார்க்கலாம், ஆன்லைன் வேலைகளை முடிக்கலாம். குறிப்பாக சிக்னல் பிரச்சனை இருக்கும் இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

46
ஏசி கோச்
Image Credit : our own

ஏசி கோச்

ஏசி கோச்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே சார்பில் படுக்கை, தலையணை, கம்பளி போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. குறிப்பாக இரவு பயணங்கள், குளிர்காலம் அல்லது மழைக்காலத்தில் இந்த வசதிகள் பயணத்தை மிகவும் சௌகரியமாக மாற்றுகின்றன.

56
மருத்துவ உதவி
Image Credit : our own

மருத்துவ உதவி

பயணத்தின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் கூட, ரயில்வே உதவிக்குத் தயாராக இருக்கும். அவசர நிலைகளில் மருத்துவ உதவி வழங்கப்படும். தேவையானால் அடுத்த நிலையத்தில் மருத்துவர் ஏற்பாடு செய்யப்படும். இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

66
ரயில்வே ஹெல்ப்லைன்
Image Credit : our own

ரயில்வே ஹெல்ப்லைன்

மேலும், பயணத்தின் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் டிடிஇ, கோச் அட்டெண்டண்ட் மற்றும் ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் உதவி பெறலாம். குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு இந்த சேவைகள் மிகவும் முக்கியமானவை. இந்த இலவச வசதிகளை தெரிந்து கொண்டு பயன்படுத்தினால், உங்கள் ரயில் பயணம் இன்னும் நிம்மதியாகவும் பாதுகாப்பாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரயில்
பயணம்
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
தொடர்வண்டிப் போக்குவரத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026: LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
Recommended image2
சிலிண்டர் விலை உயர்வு தொடங்கி மே 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன? காட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!
Recommended image3
தங்கம் வாங்குவதில் புது டிரெண்ட்: நகையை விட முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்! நிபுணர்கள் சொல்லும் காரணம்!
Related Stories
Recommended image1
இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026: LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
Recommended image2
ஐஸ்கிரீம், சாக்லேட் விலை 20% வரை அதிரடி உயர்வு.! பின்னணி காரணம் கேள்விப்பட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved